News Logo
முகப்பு தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா தொழில்நுட்பம் வேளாண்மை கல்வி சுற்றுலா ஆன்மிகம்
அண்மைச் செய்தி
முக்கிய பிரிவுகள்
முகப்பு அண்மைச் செய்திகள்
தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா தொழில்நுட்பம் வேளாண்மை கல்வி சுற்றுலா ஆன்மிகம்
தமிழ்நாடு

புதுக்கோட்டைக்கு அமித்ஷா வருகை- டிரோன்கள் பறக்கத் தடை

புதுக்கோட்டைக்கு அமித்ஷா வருகை- டிரோன்கள் பறக்கத் தடை
0 கருத்துக்கள்

புதுக்கோட்டையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வருகையை முன்னிட்டு டிரோன்கள் பறக்க நாளை (ஜனவரி 4) தடை விதிக்கப்பட்டுள்ளது. 

தமிழகம் தலைநிமிர தமிழனின் பயணம் என்ற யாத்திரையை பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் நடத்தி வருகிறார். இதன் நிறைவு விழா பொதுக்கூட்டம், புதுக்கோட்டை மாவட்டம்,  திருக்கோகர்ணத்தில் பாலன் நகர் அருகே பள்ளத்திவயல் பகுதியில் நாளை (ஜனவரி 4) மாலை 5 மணியளவில் நடைபெறுகிறது. இந்த பொதுக்கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பங்கேற்று சிறப்புரையாற்றுகிறார்.

இதனையொட்டி  டிரோன்கள் பறக்க நாளை தடை விதிக்கப்பட்டுள்ளது. தடையை மீறி டிரோன்கள் மற்றும்  ஆளில்லா வான்வழி வாகனங்கள் பறக்கவிடுபவர்கள் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸார் எச்சரித்துள்ளனர். பொதுக்கூட்டம் நடைபெறும் இடத்தை கூடுதல் டிஜிபி மகேஸ்வர தயாள் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். திருச்சி மத்திய மண்டல ஐ.ஜி. ஜோஸ் நிர்மல் குமார், புதுக்கோட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அபிஷேக் குப்தா உடனிருந்தனர். 

Kathiravan
Published By

Kathiravan

Editor / Reporter

தமிழ் செய்திகள் மற்றும் நடப்பு நிகழ்வுகள் தொடர்பான செய்திகளை வாசகர்களுக்கு துல்லியமாகவும் தெளிவாகவும் வழங்கும் செய்தியாளர்.

Published:

இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருந்ததா?

உங்கள் விருப்பத்தைத் தந்து எங்களை ஊக்குவியுங்கள்!

கருத்துப்பெட்டி (Comments)

உங்கள் பின்னூட்டத்தை உள்ளிடவும் (Enter Your Comment)

இந்த செய்திக்கு இன்னும் கருத்து வரவில்லை. முதல் ஆளாக நீங்களே பதிவிடுங்கள்!