News Logo
முகப்பு தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா தொழில்நுட்பம் வேளாண்மை கல்வி சுற்றுலா ஆன்மிகம்
அண்மைச் செய்தி
முக்கிய பிரிவுகள்
முகப்பு அண்மைச் செய்திகள்
தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா தொழில்நுட்பம் வேளாண்மை கல்வி சுற்றுலா ஆன்மிகம்
தமிழ்நாடு

கடன் ரூ.13 லட்சம் கோடி: தமிழக நிதிநிலை வெள்ளை அறிக்கையில் தகவல்:

கடன் ரூ.13 லட்சம் கோடி: தமிழக நிதிநிலை வெள்ளை அறிக்கையில் தகவல்:
0 கருத்துக்கள்

சென்னை: தமிழகத்தின் நிதிநிலை தொடர்பான வெள்ளை அறிக்கை யை, நிதியமைச்சர் மரிய வில்சன் நேற்று வெளியிட்டார். அதில், அரசின் கடன் ரூ.13 லட்சம் கோடியாக உள்ளது. ஒவ்வொரு தனி நபர் மீதும் ரூ.1.28 லட்சம் கடன் சுமை உள்ளது என்று கூறப்பட்டுள்ளது.

தவெக ஆட்சி அமைத்தது. முதல்வராக ஆட்சிப் பொறுப்பேற்ற விஜய், நிதிநிலை குறித்த வெள்ளை அறிக்கை வெளியிடப்படும் என்று கூறியிருந்தார். அதன்படி, வெள்ளை அறிக்கையை நிதியமைச்சர் மரிய வில்சன், தலைமைச் செயலகத்தில் நேற்று வெளியிட்டார்.

அதில் கூறியிருப்பதாவது: கரோனா பெருந்தொற்றுக்குப் பிந்தைய 2021-22 முதல் 2025-26 வரையிலான ஐந்தாண்டு காலக் கட்டமே இந்த வெள்ளை அறிக்கையின் மையப் பகுப்பாய்வுக் காலமாகும். கரோனா பெருந்தொற்றுக்குப் பிந்தைய மீட்சிக் காலத்தில் கர்நாடகா, மகாராஷ்டிரா போன்ற மாநிலங்கள் தங்களின் நிதி நிலையைச் சீரமைத்துள்ள நிலையில், தமிழகத்தின் வளர்ச்சி குறியீடுகள் எதிர் திசையிலேயே நகர்ந்துள்ளன.

தமிழகத்தில் ரூ.46,538 கோடியாக இருந்த வருவாய் பற்றாக்குறை கடந்த 5 ஆண்டுகளில் ரூ.78,324 கோடியாக உயர்ந்துள்ளது. இது கரோனா பெருந்தொற்று ஆண்டை விடவும் வரலாறு காணாத உச்சத்தை அடைந்துள்ளது. தற்போதைய நுகர்வுச் செலவுகளை ஈடுகட்டவே மாநிலம் கடன் பெற்றுள்ளது என்பதை இது காட்டுகிறது. அதன்படி, தமிழகத்தின் நிலுவையில் உள்ள கடன் பொறுப்புகள், 2021 ஏப்.1-ம் தேதி முதல் 2026 மார்ச் 31-ம் தேதி வரை கடந்த 5 ஆண்டுகளில் ரூ.5.13 லட்சம் கோடியில் இருந்து ரூ.10 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. அந்த வகையில், தனிநபர் கடன் சுமை ரூ.1,28,934 ஆக உயர்ந்துள்ளது. இது மற்ற மாநிலங்களை விட அதிகம்.

அதேபோல், ஆண்டு வட்டிச் சுமையானது 2021-22-ம் ஆண்டில் ரூ.41,564 கோடியாக இருந்த நிலையில், 2025-26-ல் ரூ.67,050 கோடியாக உயர்ந்துள்ளது. தற்போது, மொத்த வருவாய் வரவுகளில் சுமார் 22.8 சதவீதமும், மாநிலத்தின் சொந்த வரி வருவாயில் 34.8 சதவீதத்துக்கு மேல் வட்டி செலுத்துவதற்கே செல்கிறது. மாநிலத்தின் நிதி நெருக்கடிக்கு முக்கியக் காரணமாக வட்டியே உள்ளது. மேலும், ஜிஎஸ்டி, பெட்ரோலிய வரிமற்றும் மதுபான வரி போன்றவற்றில் முறையான மேலாண்மை இல்லாததால் ஆண்டுக்கு ரூ.51,000 கோடி வருவாய் இழப்பு ஏற்படுகிறது. புதிய திட்டங்களுக்கு மூலதனச் செலவு வெறும் 11.8 சதவீதம் மட்டுமே உள்ளது.

மின்துறை நிறுவனங்களின் கடன் மட்டும் ரூ.2.47 லட்சம் கோடியாக உள்ளது. போக்குவரத்துத் துறையில் ஒரு கி.மீ. செலவு ரூ.78.81 ஆகவும், வருவாய் ரூ.25.97 ஆகவும் உள்ளது. அதன்படி, போக்குவரத்து துறையில் ரூ.72,667 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. இவற்றையும் சேர்த்துக் கணக்கிடும் போது, மொத்த நிதிச்சுமை ரூ.13.18 லட்சம் கோடியை எட்டுகிறது. கடந்த 2021 - 2026 ஆண்டு காலக் கட்டத்தில் ரூ.4.87 லட்சம் கோடி கடன் பெறப்பட்டிருந்தது. இந்த 5 ஆண்டு கால கடன், மாநிலம் தனது முதல் 60 ஆண்டு காலத்தில் பெற்ற கடனை விட அதிகமாகும். 2025-26-ம் நிதிஆண்டின் முதல் நிலை கணக்கு களின் படி நிதிப் பற்றாக்குறை ரூ.1,33,208 கோடியாகவும், மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தி 3.77 சதவீதமாகவும் உயர்ந்துள்ளது. இது இதுவரை பதிவானவற்றில், மிக உயர்ந்த நிதிப் பற்றாக்குறையாகும்.


இந்த சூழலில் இருந்து மீள, வருவாய் திரட்டுவதை அதிகரித்தல், செலவினங்களை முறைப் படுத்து தல், பொதுத்துறை நிறுவனங்களில் சீர்திருத்தம் மற்றும் ஊழலற்ற நிர்வாகம் அவசியம் என்று வெள்ளை அறிக்கை பரிந்துரைக் கிறது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டு

ள்ளது.


Kathiravan
Published By

Kathiravan

Editor / Reporter

தமிழ் செய்திகள் மற்றும் நடப்பு நிகழ்வுகள் தொடர்பான செய்திகளை வாசகர்களுக்கு துல்லியமாகவும் தெளிவாகவும் வழங்கும் செய்தியாளர்.

Published:

இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருந்ததா?

உங்கள் விருப்பத்தைத் தந்து எங்களை ஊக்குவியுங்கள்!

கருத்துப்பெட்டி (Comments)

உங்கள் பின்னூட்டத்தை உள்ளிடவும் (Enter Your Comment)

இந்த செய்திக்கு இன்னும் கருத்து வரவில்லை. முதல் ஆளாக நீங்களே பதிவிடுங்கள்!