News Logo
முகப்பு தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா தொழில்நுட்பம் வேளாண்மை கல்வி சுற்றுலா ஆன்மிகம் விளையாட்டு நலம்
அண்மைச் செய்தி
முக்கிய பிரிவுகள்
முகப்பு அண்மைச் செய்திகள்
தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா தொழில்நுட்பம் வேளாண்மை கல்வி சுற்றுலா ஆன்மிகம் விளையாட்டு நலம்
தமிழ்நாடு

கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ. மீது உடனடியாக குற்றவியல் நடவடிக்கை எடுக்க டிஜிபி க்கு புகார்

கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ. மீது உடனடியாக குற்றவியல் நடவடிக்கை எடுக்க டிஜிபி க்கு புகார்
0 கருத்துக்கள்

கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ. மீது உடனடியாக குற்றவியல் நடவடிக்கை எடுக்க கோரி அதிமுக சார்பில் வழக்கறிஞர் பிரிவு நிர்வாகி திரிசூலி டிஜிபி க்கு புகார் அனுப்பியுள்ளார்.



 அதிமுக தென் சென்னை (வடக்கு மேற்கு) மாவட்ட வழக்கறிஞர் பிரிவு துணை செயலாளரும்

 சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞருமான

ஆர். த்ரிசூலி, கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் சி. அருள் விக்னேஷ் மீது கடுமையான குற்றவியல் நடவடிக்கை எடுக்கக் கோரி தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர், உள்துறைச் செயலாளர், காவல்துறை இயக்குநர் ஜெனரல் (DGP) மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோருக்குப் புகார் மனு ஒன்றை அனுப்பியுள்ளார்.  

​கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்குத் தனது தொலைபேசி மூலம் அநாகரிகமான மற்றும் ஆபாசமான குறுஞ்செய்திகளை அனுப்பியதுடன், ஆட்சியரின் அதிகாரப்பூர்வ இல்லத்திற்குள்ளும் அவர் போதையில் அத்துமீறி நுழைந்ததாக ஊடகங்களில் வெளியான செய்திகள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக அவர் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார். மாவட்டத்தின் நிர்வாகத் தலைவராக இருக்கும் ஒரு பெண்ணுக்கே மாநிலத்தில் பாதுகாப்பு இல்லை என்ற நிலை உருவாகியுள்ளதாகவும், குற்றவாளிகள் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.  

​மாவட்ட ஆட்சியர் தரப்பில் புகார் அளிக்கப்பட்டும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாதது கவலை அளிப்பதாகக் குறிப்பிட்டுள்ள வழக்கறிஞர், பொது அமைதியையும் சமூக ஒழுங்கையும் காக்கும் பொருட்டு, சம்பந்தப்பட்ட சட்டமன்ற உறுப்பினர் மீது உடனடியாக முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்து கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என அக்கோரிக்கையில் கேட்டுக் கொண்டுள்ளார்.

Kathiravan
Published By

Kathiravan

Editor / Reporter

தமிழ் செய்திகள் மற்றும் நடப்பு நிகழ்வுகள் தொடர்பான செய்திகளை வாசகர்களுக்கு துல்லியமாகவும் தெளிவாகவும் வழங்கும் செய்தியாளர்.

Published:

இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருந்ததா?

உங்கள் விருப்பத்தைத் தந்து எங்களை ஊக்குவியுங்கள்!

கருத்துப்பெட்டி (Comments)

உங்கள் பின்னூட்டத்தை உள்ளிடவும் (Enter Your Comment)

இந்த செய்திக்கு இன்னும் கருத்து வரவில்லை. முதல் ஆளாக நீங்களே பதிவிடுங்கள்!