News Logo
முகப்பு தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா தொழில்நுட்பம் வேளாண்மை கல்வி சுற்றுலா ஆன்மிகம் விளையாட்டு உணவு ஜோதிடம் நலம்
அண்மைச் செய்தி
முக்கிய பிரிவுகள்
முகப்பு அண்மைச் செய்திகள் பிரீமியம் கட்டுரைகள்
தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா தொழில்நுட்பம் வேளாண்மை கல்வி சுற்றுலா ஆன்மிகம் விளையாட்டு உணவு ஜோதிடம் நலம்
Advertisement / விளம்பரம்

உங்கள் வணிகத்தை லட்சக்கணக்கான வாசகர்களிடம் கொண்டு சேர்க்க வேண்டுமா?

இணையதளத்தின் முதன்மைப் பக்கங்களில் மிகக் குறைந்த கட்டணத்தில் விளம்பரம் செய்ய உடனே எங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்.

கல்வி

மதுரை ஜல்லிக்கட்டு ரோட்டரி சங்கம் சார்பில் 80வது சுதந்திர தின பேச்சு, கட்டுரை போட்டி

மதுரை ஜல்லிக்கட்டு ரோட்டரி சங்கம் சார்பில் 80வது சுதந்திர தின பேச்சு, கட்டுரை போட்டி
0 கருத்துக்கள்

நாட்டின் 80 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு மதுரை ஜல்லிக்கட்டு ரோட்டரி சங்கம் மற்றும் துளிர் அகடமி இணைந்து நடத்தும் பேச்சு, கட்டுரைப் போட்டிகளில் பள்ளி கல்லூரி மாணவர்கள் பங்கேற்கலாம்.

ஆகஸ்ட் 14, வெள்ளி காலை 9 மணிக்கு காந்தி மியூசியத்தில் பேச்சுப் போட்டிகள் நடக்க இருக்கிறது. இதில் கல்லூரி மற்றும் 11, 12ஆம் வகுப்பு மாணவர்கள் பங்கேற்கலாம். 


பள்ளிக்கு 2 மாணவர்கள் வீதம், 'சும்மாவா பெற்றோம் சுதந்திரம்' என்ற தலைப்பிலும், கல்லூரிக்கு 2 மாணவர்கள் வீதம், 'புதியதோர் உலகம் செய்வோம்' என்ற தலைப்பிலும் 5 நிமிட பேச்சுப்போட்டி நடத்தப்படும்.


கட்டுரைப் போட்டியில் பங்கேற்க விரும்பும் பள்ளி, கல்லூரி மாணவர்கள், 'நாம் எங்கே போகிறோம்?' என்ற தலைப்பில், 4 பக்கங்களுக்குள் அனுப்பலாம். 

விண்ணப்பம், கட்டுரைகள் தலைமை ஆசிரியர், முதல்வர் கையொப்பமிட்ட சான்றிதழோடு தலைமை ஆசிரியர், முதல்வரின் கையொப்பமிட்ட சான்றிதழுடன் 


விண்ணப்பம், கட்டுரைகளை, டி.சண்முகம், தலைவர், மதுரை ஜல்லிக்கட்டு ரோட்டரி சங்கம், 33, நாவலர் நகர் முதல் தெரு, எஸ்.எஸ். காலனி, பைபாஸ் ரோடு, மதுரை 16 என்ற முகவரிக்கு அனுப்பலாம்.

சுதந்திர தினத்தன்று மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா நடைபெறும். முதல் மூன்று இடங்களைப் பெறுவோர்க்கு 2000, 1000, 500 ரொக்க பரிசு, கேடயம், சான்றிதழ்கள் வழங்கப்படும். பங்கேற்கும் அனைத்து மாணவர்களுக்கும் சான்றிதழ்கள் வழங்கப்படும்.

ஏற்பாடுகளை ஜல்லிக்கட்டு ரோட்டரி சங்க தலைவர் சண்முகம், செயலாளர் கார்த்திக், பொருளாளர் முகமது உமர், ஒருங்கிணைப்பாளர்கள் மு.ஆதவன், சுப்புராஜ், டுகாதி, முத்துக்குமார், ஷர்மிளா மற்றும் துளிர் அகாடமி குழுவினர் செய்துள்ளனர்.

விவரங்களுக்கு 99401 02406, 98940 78292 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
News Today Tamil Editor
எழுத்தாளர் / Author

Kathiravan

newstodaytamill@gmail.com

உண்மையான மற்றும் உடனுக்குடனான செய்திகளை வாசகர்களுக்குத் துல்லியமாக வழங்குவதில் அனுபவம் மிக்க செய்தி ஆசிரியர்.

Published: 07 Aug 2026, 12:00 AM Updated: 07 Aug 2026, 12:00 AM

இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருந்ததா?

உங்கள் விருப்பத்தைத் தந்து எங்களை ஊக்குவியுங்கள்!

கருத்துப்பெட்டி (Comments)

உங்கள் பின்னூட்டத்தை உள்ளிடவும் (Enter Your Comment)

இந்த செய்திக்கு இன்னும் கருத்து வரவில்லை. முதல் ஆளாக நீங்களே பதிவிடுங்கள்!

Advertisement / விளம்பரம்

உங்கள் வணிகத்தை லட்சக்கணக்கான வாசகர்களிடம் கொண்டு சேர்க்க வேண்டுமா?

இணையதளத்தின் முதன்மைப் பக்கங்களில் மிகக் குறைந்த கட்டணத்தில் விளம்பரம் செய்ய உடனே எங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்.