News Logo
முகப்பு தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா தொழில்நுட்பம் வேளாண்மை கல்வி சுற்றுலா ஆன்மிகம் விளையாட்டு உணவு ஜோதிடம் நலம்
அண்மைச் செய்தி
முக்கிய பிரிவுகள்
முகப்பு அண்மைச் செய்திகள் பிரீமியம் கட்டுரைகள்
தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா தொழில்நுட்பம் வேளாண்மை கல்வி சுற்றுலா ஆன்மிகம் விளையாட்டு உணவு ஜோதிடம் நலம்
Advertisement / விளம்பரம்

உங்கள் வணிகத்தை லட்சக்கணக்கான வாசகர்களிடம் கொண்டு சேர்க்க வேண்டுமா?

இணையதளத்தின் முதன்மைப் பக்கங்களில் மிகக் குறைந்த கட்டணத்தில் விளம்பரம் செய்ய உடனே எங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்.

சினிமா

பிக் பாஸிற்கு போக வேண்டாம் என பேமிலி தடுத்தது: டைட்டில் வின்னர் திவ்யா கணேஷ் பேட்டி!

பிக் பாஸிற்கு போக வேண்டாம் என பேமிலி தடுத்தது:  டைட்டில் வின்னர் திவ்யா கணேஷ் பேட்டி!
NEWS TODAY TAMIL
Updated on: 19 Jan 2026, 12:00 am 2 min read
0 கருத்துக்கள்

பிக் பாஸ் ஷோவிற்குள் வரும்போது என் பேமிலியும், ப்ரெண்ட்ஸூம் போக வேண்டாம் என்று சொன்னாங்க என டைட்டில் வின்னர் பட்டம் வென்ற திவ்யா கணேஷ் கூறினார்.

கடந்த பல ஆண்டுகளாக தனியார் தொலைக்காட்சியில் பிக் பாஸ் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. கடந்த அக்டோபர் மாதம் தொடங்கிய 'பிக் பாஸ் சீசன் 9' நிகழ்ச்சியின் கிராண்ட் ஃபினாலே நேற்று இரவு நடைபெற்றது. நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கினார். பிரஜின், சாண்ட்ரா, அமித், திவ்யா கணேஷ் ஆகியோர் வைல்டு கார்டு மூலம் என்ட்ரி கொடுத்திருந்தனர். ஒவ்வொரு வாரமும் நடைபெறும் எவிக்‌ஷன் மூலம் ஒவ்வொருவராக வெளியேற, கடைசி கட்டத்தில் திடீரென  கம்ருதீன், பார்வதி ஆகிய இருவரும் ரெட் கார்டு மூலம் வெளியேற்றப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பணப்பெட்டி டாஸ்கில் 18 லட்ச ரூபாயுடன் கானா வினோத் வெளியேறினார்.

இந்த நிகழ்ச்சியில் திவ்யா கணேஷ், சபரிநாதன், விக்கல்ஸ் விக்ரம் மற்றும் அரோரா ஆகியோர் இறுதிச்சுற்றுக்கு தேர்வாகினர். இவர்களில் முதலில் அரோரா, அடுத்து விக்கல்ஸ் விக்ரம் ஆகியோர் வெளியேறினர். திவ்யா, சபரிநாதன் இருவரும் இறுதிச்சுற்றுக்கான மேடையில் இருந்தனர். இவர்களில் இருவரில் திவ்யா கணேஷை டைட்டில் வின்னராக விஜய் சேதுபதி அறிவித்தார். சபரிநாதன் ரன்னராக அறிவிக்கப்பட்டார். 

பிக் பாஸ் டைட்டில் வின்னரான திவ்யா கணேஷ் கூறுகையில், " என்னுடைய முதல் டிராபி இது. நிறைய சேனல்களில் வேலை செய்துள்ளேன். எல்லா விருது நிகழ்ச்சிகளுக்கும் போவேன், எல்லாத்துலையும் நாமினி ஆவேன். ஆனால், விருது கிடைக்காது.  பிக் பாஸ் ஷோவிற்குள் வரும்போது என் பேமிலியும், ப்ரெண்ட்ஸூம் போக வேண்டாம் என்று சொன்னார்கள். ஆனால்,  எனக்கு இது ஒரு பெரிய வாய்ப்பு. நான் டிராபியை எதிர்ப்பார்த்து நிகழ்ச்சிக்குள்ள வரலை. மக்கள் எனக்கு அன்பு கொடுத்தாங்க. இந்த வீட்டில நான் நானாக இருந்ததால் கிடைச்ச டிராபி தான் இது. ரொம்ப சந்தோஷமா இருக்கு" என்றார்.
 

இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருந்ததா?

உங்கள் விருப்பத்தைத் தந்து எங்களை ஊக்குவியுங்கள்!

கருத்துப்பெட்டி (Comments)

உங்கள் பின்னூட்டத்தை உள்ளிடவும் (Enter Your Comment)

இந்த செய்திக்கு இன்னும் கருத்து வரவில்லை. முதல் ஆளாக நீங்களே பதிவிடுங்கள்!

Advertisement / விளம்பரம்

உங்கள் வணிகத்தை லட்சக்கணக்கான வாசகர்களிடம் கொண்டு சேர்க்க வேண்டுமா?

இணையதளத்தின் முதன்மைப் பக்கங்களில் மிகக் குறைந்த கட்டணத்தில் விளம்பரம் செய்ய உடனே எங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்.