ரோட்டரி கிளப் ஆஃப் மதுரை கிளாசிக் மற்றும் National Institute Madurai பயிற்சி மையம் இணைந்து, மதுரை அமெரிக்கன் கல்லூரி மாணவர்களுக்காக போட்டித் தேர்வுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
நிகழ்ச்சியில் மாணவர்களுக்கு TNPSC, Bank, SSC, Railway, Police, S.I. உள்ளிட்ட போட்டித் தேர்வுகள், அவற்றிற்கான தயாரிப்பு முறைகள், வேலைவாய்ப்பு வாய்ப்புகள் மற்றும் வெற்றி பெறும் உத்திகள் குறித்து விழிப்புணர்வு வழங்கப்பட்டது.
மதுரை கிளாசிக் ரோட்டரி சங்க தலைவர் மற்றும் National Institute Madurai பயிற்சி மைய இயக்குநர் வெங்கடாசலம் மாணவர்களிடம் உரையாற்றி, போட்டித் தேர்வுகளின் முக்கியத்துவம், திட்டமிட்ட பயிற்சியின் அவசியம் மற்றும் அரசு வேலைவாய்ப்புகளை அடைவதற்கான வழிமுறைகள் குறித்து விரிவாக எடுத்துரைத்து, மாணவர்களை ஊக்குவித்தார்.