மீனாட்சி அம்மன் கோவிலுக்கு செல்லும் முதல்வர் விஜய் வந்த போது வராத மின்தடை
துணை ஜனாதிபதி, முன்னாள் முதலமைச்சர் எடப்பாடியார் மற்றும் பக்தர்கள் செல்லும் பொழுது கோவிலில் மின்வெட்டு ஏன் ஏற்படுகிறது?
கைதிகள் தப்பித்து சென்றதற்கு அதிகாரிகள் இடமாற்றம், சஸ்பெண்ட் நடவடிக்கை எடுத்து பிரச்சினையை
முடித்துக் கொள்வதா ?
இதற்கு எல்லாம் தார்மீக பொறுப்பு ஏற்று அமைச்சர் நிர்மல் குமார் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் இதுதான் மக்களின் எதிர்பார்ப்பு என்று
முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் கண்டனம் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் புழல் சிறையில் தவெக ஆட்சி அமைந்த பிறகு, முதல்வர் விஜய் நேரில் சென்று பாதுகாப்பு குறித்து ஆய்வு மேற்கொண்ட சில வாரங்கள் கூட ஆகாத நிலையில் புழல் சிறையிலிருந்து இரண்டு கைதிகள் தப்பித்து சென்றார்கள்.
அதை தொடர்ந்து அக்டோபர் 26ம் தேதி இரவு, தேனி சிறையிலிருந்து 17 கைதிகள் தப்பிய சம்பவம் மாநிலத்தையே நடுங்க வைத்து அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. புழல் சிறை, தேனி சிறை என அடுத்தடுத்து கைதிகள் தப்பியதால், சிறைத்துறையின் பாதுகாப்பு கேள்விக்குறியாக இருக்கிறது. இதை அடுத்து சிறைத்துறை டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர் மாற்றப்பட்டு, சங்கர் ஐபிஎஸ் நியமிக்கப்பட்டிருக்கிறார்.
அதிகாரிகள் சுழற்சி முறையில் ஆய்வு செய்ய வேண்டும். சிறையின் பாதுகாப்பு பலவீனம் அடைந்துவிட்டது.
மதுரை மீனாட்சி அம்மன்கோயிலில் துணை ஜனாதிபதி தரிசிக்க வந்த போது, அவருக்கு கிடைத்த வரவேற்பு அறிவிக்கப்படாத மின்வெட்டு.
இந்தியாவின் இரண்டாவது குடிமகன். வருகிறபோது கூட தடையில்லாமல் மின்சாரம் கொடுப்பதற்கு கூட தவெக அரசுக்கு முன்னேற்பாடுகள் செய்ய முடியவில்லை என்று சொன்னால், இந்த இயலாமையை நாம் எப்படி எடுத்துக் கொள்வது?
அதேபோன்று முன்னாள் முதலமைச்சர் எடப்பாடியார் மதுரை மீனாட்சிஅம்மன்கோவிலுக்கு தரிசனம் செய்யும்போது, தடையில்லாத மின்சாரம் கொடுக்க முடியவில்லை.
ஏன் முதல்வர் விஜய் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வந்த பொழுது மின்சாரம் தடை ஏற்படவில்லையே.?
துணை ஜனாதிபதி வருகிறபோதும், முன்னாள் முதல்வர் வருகிறபோதும், , பொதுமக்கள் வருகிறபோதும், சாமானிய பக்தர்கள் வருகிறபோது, மின் தடை ஏற்படுகிறது. முதல்வர் வருகிறபோது மட்டும் ஜெனரேட்டர் பழுதடையவில்லையா?
தகுதி இல்லாத அமைச்சருக்கு 7 துறை கொடுத்து, தடுமாறிக் கொண்டிருக்கிற காரணத்தினால், தேனி சிறையிலிருந்து 17 பேர்கள், புழல் சிறையில் 2பேர் தப்பிச் சென்றது? தடையில்லா மின்சாரத்தை கொடுக்க முடியாதது.? வீடுகளுக்கு, தொழிற்சாலைகள் விவசாயத்திற்கு மின்சாரத்தை சீராக தரவில்லை.
கைதிகள் சிறையிலிருந்து தப்பிச் சென்றால், அதிகாரிகளை சஸ்பென்ட், டிரான்ஸ்பர் என இந்த பிரச்சனையை முடிச்சிடலாம் என தவெக அரசு நினைக்கிறது. சட்டத்துறை, மின்சாரத்துறை அமைச்சர் நிர்மல் குமார் தார்மீக பொறுப்பேற்று ராஜினாமா செய்ய வேண்டும்.
இவ்வாறு உதயகுமார் கூறியுள்ளார்.