News Logo
முகப்பு தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா தொழில்நுட்பம் வேளாண்மை கல்வி சுற்றுலா ஆன்மிகம் விளையாட்டு நலம்
அண்மைச் செய்தி
முக்கிய பிரிவுகள்
முகப்பு அண்மைச் செய்திகள்
தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா தொழில்நுட்பம் வேளாண்மை கல்வி சுற்றுலா ஆன்மிகம் விளையாட்டு நலம்
இந்தியா

நேர்மை, தவம், கண்ணியமிக்க வாழ்க்கை கடைப்பிடித்தவர் முத்துராமலிங்க தேவர் .

நேர்மை, தவம், கண்ணியமிக்க வாழ்க்கை கடைப்பிடித்தவர் முத்துராமலிங்க தேவர் .
0 கருத்துக்கள்

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் ஜெயந்தி மற்றும் குருபூஜை நாளான இன்று, குடியரசுத் துணைத் தலைவர் திரு. சி. பி. ராதாகிருஷ்ணன் அவர்கள், இராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன்னில் அமைந்துள்ள தேவர் திருமகனாரின் நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செலுத்தி வணங்கினார். பின்னர் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் நினைவு இல்லத்தை பார்வையிட்டு, அவரது உறவினர்களுடன் கலந்துரையாடினார் .


அப்போது செய்தியாளர்களிடம் பேசிய குடியரசுத் துணைத் தலைவர், " பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்கள் சுதந்திரப் போராட்டக் காலத்தில் மட்டுமல்ல, அதற்குப் பிறகும் தொடர்ந்து சமுதாயத்திற்காக உழைப்பதையே தன் வாழ்வின் குறிக்கோளாகக் கொண்டு செயல்பட்டவர்.

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அவர்களுடைய மனதில் இடம் பிடித்தது மட்டுமல்லாமல், அவரைத் தலைவராக ஏற்றுக்கொண்டு, இந்திய தேசத்தினுடைய தேசிய எழுச்சிக்கும் தமிழ் மண்ணிலே தெய்வீக எழுச்சிக்கும் தன் வாழ்நாள் முழுவதும் உழைத்தவர்.

அவர் தன்னுடைய தலைவர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அவர்களுக்குத் எந்தத் துரோகத்தையும் செய்ய விரும்பவில்லை. அவர் மட்டும் சில அரசியல் சமரசங்களைச் செய்துகொண்டிருப்பார் என்று சொன்னால், தமிழ்நாட்டினுடைய முதலமைச்சராக முத்துராமலிங்கத் தேவர் நிச்சயமாக ஆட்சிக் கட்டிலில் அமர்ந்திருப்பார்.

அவர் எந்த நேரத்திலும் எந்தச் சமரசத்தையும் தன் கொண்ட கொள்கைக்கு எதிராகச் செய்துகொள்ளாதவர். தன் வாழ்நாள் முழுவதும் நேர்மை, தவம், கண்ணியமிக்க வாழ்க்கை ஆகியவற்றைக் கடைப்பிடித்தவர். 


தாழ்த்தப்பட்ட மக்களுக்காக குரல் கொடுத்தவர் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர்.மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கான ஆலயப் பிரவேசப் போராட்டத்தை யார் தடுத்தாலும், நான் முன்னின்று நடத்துவேன் என்று சொன்ன பிறகுதான் அது வெற்றிகரமாக நடந்தது.தன்னுடைய சொத்தில் பெரும்பகுதியை அவர் தாழ்த்தப்பட்ட மக்களுக்காகத்தான் தந்திருக்கிறார்.


இப்படி ஒரு மகத்தான தேசியத் தலைவரான பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்களுடைய இறப்பும் பிறப்பும் ஒரே நாளில் அமைந்திருப்பது, அவர் ஒரு மகா சித்தபுருஷர் என்பதை உணர்த்துகிறது.

அவருக்கு நாம் செலுத்துகின்ற உண்மையான அஞ்சலி என்பது, இந்தத் தமிழ் மண்ணில் தேசியத்தையும் , தெய்வீகத்தையும் என்றைக்கும் மங்காமல் பாதுகாப்பதுதான். அவருக்கு அஞ்சலி செலுத்துவது இந்தியா முழுவதும் இருக்கின்ற மக்களினுடைய கடமையாகும். பார் உள்ளளவும் அவருடைய புகழ் இந்த மண்ணிலே நிலைத்திருக்கும்." என்று புகழாரம் சூட்டினார்.

Kathiravan
Published By

Kathiravan

Editor / Reporter

தமிழ் செய்திகள் மற்றும் நடப்பு நிகழ்வுகள் தொடர்பான செய்திகளை வாசகர்களுக்கு துல்லியமாகவும் தெளிவாகவும் வழங்கும் செய்தியாளர்.

Published:

இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருந்ததா?

உங்கள் விருப்பத்தைத் தந்து எங்களை ஊக்குவியுங்கள்!

கருத்துப்பெட்டி (Comments)

உங்கள் பின்னூட்டத்தை உள்ளிடவும் (Enter Your Comment)

இந்த செய்திக்கு இன்னும் கருத்து வரவில்லை. முதல் ஆளாக நீங்களே பதிவிடுங்கள்!