News Logo
முகப்பு தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா தொழில்நுட்பம் வேளாண்மை கல்வி சுற்றுலா ஆன்மிகம்
அண்மைச் செய்தி
முக்கிய பிரிவுகள்
முகப்பு அண்மைச் செய்திகள்
தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா தொழில்நுட்பம் வேளாண்மை கல்வி சுற்றுலா ஆன்மிகம்
தமிழ்நாடு

கர்நாடகாவில் பஸ் மீது லாரி மோதி விபத்து:17 பேர் பலி

கர்நாடகாவில் பஸ் மீது லாரி மோதி விபத்து:17 பேர் பலி
0 கருத்துக்கள்

கர்நாடகாவில் இன்று அதிகாலை ஏற்பட்ட விபத்தில் 17 பயணிகள் உடல் கருகி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

கர்நாடகா மாநிலம், பெங்களூருவில் இருந்து கோகர்ணாவிற்கு தனியார் பஸ் நேற்று இரவு புறப்பட்டது.  சித்ரதுர்கா மாவட்டத்தில் உள்ள கோர்லத்து கிராமம் அருகே இன்று அதிகாலை 3 மணியளவில் பஸ் தேசிய நெஞ்சாலையில் வந்து கொண்டிருந்தது.

அப்போது அந்த பஸ்  மீது லாரி மோதியது. இதில் பஸ் தீப்பற்றி எரிந்தது. இதுகுறித்த தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு போலீஸார், தீயணைப்பு படையினர் விரைந்து வந்து மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.பஸ் முழுவதும் தீப்பற்றி எரிந்ததால்  நீண்ட நேரம் போராடி தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இந்த விபத்தில் பஸ்சில் இருந்த 17 பயணிகள்  தீயில் கருகி உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் வாய்ப்புள்ளது என்று போலீஸார் தெரிவித்தனர்.

Kathiravan
Published By

Kathiravan

Editor / Reporter

தமிழ் செய்திகள் மற்றும் நடப்பு நிகழ்வுகள் தொடர்பான செய்திகளை வாசகர்களுக்கு துல்லியமாகவும் தெளிவாகவும் வழங்கும் செய்தியாளர்.

Published:

இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருந்ததா?

உங்கள் விருப்பத்தைத் தந்து எங்களை ஊக்குவியுங்கள்!

கருத்துப்பெட்டி (Comments)

உங்கள் பின்னூட்டத்தை உள்ளிடவும் (Enter Your Comment)

இந்த செய்திக்கு இன்னும் கருத்து வரவில்லை. முதல் ஆளாக நீங்களே பதிவிடுங்கள்!