விஜய் நடித்த 'ஜன நாயகன்' படத்தை வெளியிட படத்தின் தயாரிப்பாளர், உச்சசநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் விஜய் நடிப்பில் ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவான 'ஜன நாயகன்' படத்துக்கு தணிக்கை சான்றிதழ் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. பொங்கல் பண்டிகைக்கு இந்த படத்தை எப்படியாவது வெளியிட வேண்டும் என்று படக்குழுவினர் முயற்சி எடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில், 'ஜன நாயகன்' படத்துக்கான தணிக்கை தொடர்பாக மறு விசாரணை குழுவினருக்கு வேண்டுகோள் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. இதற்கு அவர்கள் உரிய பதில் அளிக்காத நிலையில் சட்ட ரீதியாக அதனை எதிர்கொண்டு படத்தை வெளியிட சட்ட நடவடிக்கை எடுக்க மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த படத்தின் தயாரிப்பாளர் தரப்பில் நாளை மறுநாள் (ஜனவரி 12) உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.