News Logo
முகப்பு தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா தொழில்நுட்பம் வேளாண்மை கல்வி சுற்றுலா ஆன்மிகம் விளையாட்டு
அண்மைச் செய்தி
முக்கிய பிரிவுகள்
முகப்பு அண்மைச் செய்திகள்
தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா தொழில்நுட்பம் வேளாண்மை கல்வி சுற்றுலா ஆன்மிகம் விளையாட்டு
கல்வி

மதுரை திருமங்கலம் அரசு பள்ளி மாணவிக்கு பொருளியலின் இளவரசி விருது

மதுரை திருமங்கலம் அரசு பள்ளி மாணவிக்கு பொருளியலின் இளவரசி விருது
0 கருத்துக்கள்

வெற்றி பள்ளிகள் திட்டத்தின் மூலம் திருமங்கலம் அரசு பள்ளி மாணவிக்கு பொருளியலின் இளவரசி விருது


இன்று மதுரை மாவட்டம், திருமங்கலம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் அருள்ஜோதி முன்னிலையில் பொருளியலின் இளவரசி விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.  

இப்பள்ளியின் கலைப் பிரிவு மேல்நிலை இரண்டாம் ஆண்டு மாணவி ஆசிபா எழுதிய "பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு - 2026" கட்டுரை மற்றும் அவரின் பொருளியல் சிந்தனைகளை பாராட்டியும் அவருக்கு இந்தியாவில் உள்ள ஐக்கிய நாடுகள் தன்னார்வலர் குழு "பொருளியலின் இளவரசி ஆசிபா" என்ற உயர்ந்த விருதை மதுரை காமராஜர் பல்கலைக்கழக கணிதப் பொருளாதாரத் துறை தலைவர் மற்றும் இணைப் பேராசிரியர் புஷ்பராஜ், மதுரை அமெரிக்கன் கல்லூரி பொருளாதாரத்துறை ஓய்வு பெற்ற தலைவர் மற்றும் இணைப் பேராசிரியர் முத்துராஜா மற்றும் எழுமலை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி முதுகலை பொருளியல் ஆசிரியர் முருகேசன் அவர்கள் மூலம் மாணவி ஆசிபாவுக்கு வாழ்த்தி பாராட்டி வழங்கப்பட்டது. மேலும் பேராசிரியர்கள் புஷ்பராஜ், முத்துராஜா மற்றும் ஆசிரியர் முருகேசன் பேசும் பொழுது மாணவி ஆசிபா எழுதிய கட்டுரையின் சிறப்புகளையும் அவரின் பொருளியல் சிந்தனைகளைப் பற்றியும் விளக்கி கூறினார்கள். மேலும் உயர்கல்விகளுக்கு வழிகாட்டும் விதமாக பொருளியல் பாடத்தின் முக்கியத்துவத்தையும் வேலை வாய்ப்பையும் பற்றி பேசினார்கள்.

மாணவி ஆசிபா பேசும் பொழுது நான் எனது பள்ளியில் இருந்து வெற்றி பள்ளிகள் திட்டத்தின் கீழ் திருமங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெறும் வகுப்புகளுக்கு சனிக்கிழமைகளில் படிப்பதற்கு சென்று கொண்டிருக்கிறேன். அங்கு எங்களுக்கு பொருளியல் பாடம் எடுக்கும் ஆசிரியர் முருகேசன் "பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு - 2026 கட்டுரையை எழுது வருமாறு கூறினார். நாங்கள் வகுப்பில் அவரிடம் கட்டுரையை சமர்ப்பித்து, அதைப் பற்றி வகுப்பிலும் கலந்துரையாடினோம். அவர் என்னையும் மற்ற மாணவர்களையும் வாழ்த்திப் பாராட்டினார். இன்று இந்த பொருளியலின் இளவரசி விருதை நான் பெறுவது மகிழ்ச்சியும் புதிய உத்வேகத்தையும் கொடுத்துள்ளது. இந்த விருதை நான் பெறுவதற்கு மிக முக்கிய காரணம் வெற்றி பள்ளிகள் திட்டமும் எனது பொருளியல் ஆசிரியர்கள் முருகேசன் மற்றும் சங்கேஸ்வரி

என்பதை நான் பெருமையோடு சொல்லிக் கொள்கின்றேன். பொருளாதாரம் பாடம் படிக்கும் விருப்பத்தையும் ஆர்வத்தையும் அதிகரித்துள்ளது. உயர் கல்வியில் பொருளியல் பாடத்தை எடுத்து நன்கு படித்து, பொருளியல் வல்லுனராக வந்து நமது நாட்டில் இருக்கும் வறுமையையும் வேலையில்லா திண்டாட்டத்தையும் முழுமையாக ஒழிப்பதே எனது வாழ்க்கையின் அடையாளமாக இருக்கும் என்றார். நான் கற்ற கல்வியை இந்த சமூக வளர்ச்சிக்கு என் வாழ்நாள் முழுவதும் பயன்படுத்துவேன் என்றார். இந்த விருதை எனக்குத் தந்த ஐக்கிய நாடுகள் தன்னார்வலர் குழுவிற்கும், தமிழக அரசுக்கும், பேராசிரியர்களுக்கும், கல்வி அதிகாரிகளுகக்கும், தலைமை ஆசிரியர் அவர்களுக்கும், எனது ஆசிரியர்கள் அவர்களுக்கும், மதுரை மாவட்ட வெற்றி பள்ளிகள் திட்ட அதிகாரி மற்றும் அலுவலர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகளை தெரியப்படுத்திக் கொள்கின்றேன் என்றார். மாணவி ஆசிபாவை ஆசிரியர்கள் மற்றும் பேராசிரியர்கள் வாழ்த்தியும் பாராட்டியும் வருகிறார்கள்.

Kathiravan
Published By

Kathiravan

Editor / Reporter

தமிழ் செய்திகள் மற்றும் நடப்பு நிகழ்வுகள் தொடர்பான செய்திகளை வாசகர்களுக்கு துல்லியமாகவும் தெளிவாகவும் வழங்கும் செய்தியாளர்.

Published:

இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருந்ததா?

உங்கள் விருப்பத்தைத் தந்து எங்களை ஊக்குவியுங்கள்!

கருத்துப்பெட்டி (Comments)

உங்கள் பின்னூட்டத்தை உள்ளிடவும் (Enter Your Comment)

இந்த செய்திக்கு இன்னும் கருத்து வரவில்லை. முதல் ஆளாக நீங்களே பதிவிடுங்கள்!