News Logo
முகப்பு தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா தொழில்நுட்பம் வேளாண்மை கல்வி சுற்றுலா ஆன்மிகம்
அண்மைச் செய்தி
முக்கிய பிரிவுகள்
முகப்பு அண்மைச் செய்திகள்
தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா தொழில்நுட்பம் வேளாண்மை கல்வி சுற்றுலா ஆன்மிகம்
தமிழ்நாடு

தீபம் ஏற்ற வேண்டும் திருப்பரங்குன்றம் தீபத்தூணில்

தீபம் ஏற்ற வேண்டும் திருப்பரங்குன்றம் தீபத்தூணில்
0 கருத்துக்கள்

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத் தூணில் தேவஸ்தானமே தீபம் ஏற்ற வேண்டும் என்று மதுரை ஹைகோர்ட் கிளை டிவிஷன் பெஞ்ச் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

 திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக மதுரை ஐகோர்ட் கிளை டிவிஷன் பெஞ்சில் வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது.

 விசாரணை முடிவுற்ற நிலையில்  இன்று நீதிபதிகள் ஜெயச்சந்திரன், ராமகிருஷ்ணன் ஆகியோர் தீர்ப்பு வழங்கினர்.

 தீர்ப்பில், 1996 ஆம் ஆண்டு இதே வழக்கு விசாரணைக்கு வந்த போது உச்சிப் பிள்ளையார் கோவில் தவிர மலை உச்சியில் மாற்று இடத்திலும் தீபம் ஏற்றலாம் என்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அந்தத் தீர்ப்பின் அடிப்படையில்  மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தேவஸ்தானம் தீபம் ஏற்ற வேண்டும். இதற்காக மத்திய தொல்லியல் துறை அனுமதியையும் பெறலாம். 

 இதற்கு மாவட்ட நிர்வாகம் முழு ஒத்துழைப்பு தர வேண்டும் என்று தீர்ப்பில் தெரிவித்துள்ளனர்.

மேலும் நீதிபதிகள் கூறியதாவது, பொது அமைதிக்கு  பிரச்சனை ஏற்பட காரணம் அரசே ஆகும்.

அரசியல் காரணங்களை அடிப்படையாகக் கொண்டு, அரசு செயல்படக்கூடாது.

தீபத்தூண் தர்காவுக்கு சொந்தமானது என்பது ஏற்புடையது அல்ல அது தேவஸ்தானத்திற்கு சொந்தமான இடத்திலேயே உள்ளது.

 தீபமேற்றும் இடத்தை தர்காவிற்கு இடையூறு ஏற்படாத வகையில் மாற்றுவது குறித்து பரிசீலிக்க முந்தைய உத்தரவுகள் உள்ளன.

 இவ்வாறு தீர்ப்பு வழங்கப்பட்டு மேல்முறையீட்டு மனுக்கள் முடித்து வைக்கப்பட்டது. 

Kathiravan
Published By

Kathiravan

Editor / Reporter

தமிழ் செய்திகள் மற்றும் நடப்பு நிகழ்வுகள் தொடர்பான செய்திகளை வாசகர்களுக்கு துல்லியமாகவும் தெளிவாகவும் வழங்கும் செய்தியாளர்.

Published:

இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருந்ததா?

உங்கள் விருப்பத்தைத் தந்து எங்களை ஊக்குவியுங்கள்!

கருத்துப்பெட்டி (Comments)

உங்கள் பின்னூட்டத்தை உள்ளிடவும் (Enter Your Comment)

இந்த செய்திக்கு இன்னும் கருத்து வரவில்லை. முதல் ஆளாக நீங்களே பதிவிடுங்கள்!