News Logo
முகப்பு தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா தொழில்நுட்பம் வேளாண்மை கல்வி சுற்றுலா ஆன்மிகம்
அண்மைச் செய்தி
முக்கிய பிரிவுகள்
முகப்பு அண்மைச் செய்திகள்
தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா தொழில்நுட்பம் வேளாண்மை கல்வி சுற்றுலா ஆன்மிகம்
தமிழ்நாடு

திமுக அரசை வீட்டுக்கு அனுப்ப 2 மாதம் தான் உள்ளது- எல்.முருகன் பேட்டி

திமுக அரசை வீட்டுக்கு அனுப்ப 2 மாதம் தான் உள்ளது- எல்.முருகன் பேட்டி
0 கருத்துக்கள்

திமுகவை வீட்டுக்கு அனுப்ப இரண்டு மாதம்  தான் உள்ளது என்று மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கூறினார். 

மதுரை திருப்பரங்குன்றம் கோயிலில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன்  இன்று (டிசம்பர் 30) சாமி தரிசனம் செய்தார். அவருக்கு கோயில் நிர்வாகம் சார்பில் பூரண கும்பம் மரியாதை செலுத்தப்பட்டது.

இதனைத் தொடர்ந்து கோயில் வாசலில் எல்.முருகன் செய்தியாளர்களிடம் கூறுகையில், " திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்ற வேண்டும் என்பது பக்தர்களின் நீண்ட நாள் கோரிக்கை. ஒவ்வொரு ஆண்டும் பக்தர்கள் அதற்காக கிட்டத்தட்ட 40 ஆண்டுகளாக முயற்சி எடுத்து வருகிறார்கள். கார்த்திகை தீபத்தின்போது பக்தர்கள் இங்கு வந்து முறையிடுவதும், அவர்களை கைது செய்து, அடைத்து வைப்பதும் என ஒவ்வொரு ஆண்டும் நடைபெறுகிறது.

 இது தொடர்பாக  நீதிமன்றத்தில் பக்தர்கள் வழக்குத் தொடுத்து, உயர்நீதிமன்றம் அனுமதி கொடுத்த பிறகும் கூட தீபம் ஏற்ற முடியாத சூழல் இருப்பது தமிழகத்தில் திமுக ஆட்சியில் எந்த அளவுக்கு அராஜகமும், அட்டூழியமும் நடைபெறுகிறது என்பதை கண்கூடாக பார்க்கிறோம்.

சிஐஎஸ்எப் வீரர்களையும் அனுமதிக்க முடியாத அளவிற்கு திமுகவின் அரசும், காவல் துறையும், மு.க.ஸ்டாலினும் நடந்து கொண்டிருக்கிறார்கள். இதனால் தமிழ்நாட்டில் மட்டுமல்ல உலகம் முழுவதும் உள்ள முருக பக்தர்கள் கோபம் கொண்டிருக்கிறார்கள்.

திமுகவை வீட்டுக்கு அனுப்ப இரண்டு மாதம்  தான் உள்ளது. இந்திய அரசியலமைப்பு சட்டத்தை தி.மு.க. அரசு காலில் போட்டு மிதிக்கிறார்கள். அம்பேத்கரை மதிக்காத அரசு என்றால் அது திமுக அரசு  தான். 

பூரண சந்திரன் மரணத்திற்கு ஸ்டாலின் தான் பொறுப்பேற்க வேண்டும். அறுபடை முருகனும் தமிழகத்தில் நடக்கும் அட்டூழியத்தை பார்த்துக் கொண்டிருக்கிறார். இதற்கெல்லாம் இன்னும் இரண்டு மாதத்தில் பதில் கொடுப்பார்" என்றார்.


Kathiravan
Published By

Kathiravan

Editor / Reporter

தமிழ் செய்திகள் மற்றும் நடப்பு நிகழ்வுகள் தொடர்பான செய்திகளை வாசகர்களுக்கு துல்லியமாகவும் தெளிவாகவும் வழங்கும் செய்தியாளர்.

Published:

இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருந்ததா?

உங்கள் விருப்பத்தைத் தந்து எங்களை ஊக்குவியுங்கள்!

கருத்துப்பெட்டி (Comments)

உங்கள் பின்னூட்டத்தை உள்ளிடவும் (Enter Your Comment)

இந்த செய்திக்கு இன்னும் கருத்து வரவில்லை. முதல் ஆளாக நீங்களே பதிவிடுங்கள்!