ராயல் என்ஃபீல்ட் மோட்டார் நிறுவனம் தனது 125-வது ஆண்டு பாரம்பரியத்தை கஷ்டமர்களுடன் இணைந்து ONE RIDE 2026! கொண்டாடுகிறது.
இதற்காக உலகம் முழுவதும் 63 நாடுகளில் இந்த One Ride 2026 சிறப்பாக நடைபெற இருக்கிறது.
உலகம் முழுவதும் 1,25,000 கஷ்டமர்களை ஒன்று திரட்டி, இந்த One Ride-ஐ ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வாக கொண்டாட Royal Enfield திட்டமிட்டிருக்கிறது.
மதுரை சார்பாக ராயல் என்ஃபீல்ட் ஷோரூம் பங்குதாரர்கள் ஆதிலிங்கம், வெங்கடேசன் மற்றும் ராஜ்குமார், ஈஸ்வர ராஜா ஆகியோர் தலைமையில் One ride 2026 நிகழ்ச்சி அரசரடி யூசி பள்ளி மைதானத்தில் காலை 10 மணிக்கு நடைபெறுகிறது.
காலை 7 மணி முதல், மதியம் 1 மணி வரை 1,250 ரைடர்களை ஒன்று திரட்டி, இந்த One Ride-ஐ மிக பிரம்மாண்டமாக நடத்த இருக்கிறார்கள்.
இதில் பைக் ரைடர்களின் சாகச போட்டிகள் நடைபெறும். வெற்றி பெற்றவர்களுக்கு ராயல் என்பீல்ட் நிறுவன மண்டல மேலாளர் பிரவீன், ஏரியா விற்பனை மேலாளர்கள் பிரபாகரன், முரளி
சர்வீஸ் மேலாளர் பழனிவேல் ஆகியோர் கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்குகளை வழங்குகின்றனர்.