News Logo
முகப்பு தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா தொழில்நுட்பம் வேளாண்மை கல்வி சுற்றுலா ஆன்மிகம்
அண்மைச் செய்தி
முக்கிய பிரிவுகள்
முகப்பு அண்மைச் செய்திகள்
தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா தொழில்நுட்பம் வேளாண்மை கல்வி சுற்றுலா ஆன்மிகம்
தமிழ்நாடு

நீதிமன்ற வாசலில் போலீஸ்காரர் தற்கொலை

நீதிமன்ற வாசலில் போலீஸ்காரர் தற்கொலை
0 கருத்துக்கள்

மதுரையில் உயர்நீதிமன்றத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த சிறப்பு காவல்படை காவலர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

மதுரை மாவட்டம், எழுமலை கோட்டைப்பட்டியைச் சேர்ந்தவர் மகாலிங்கம். இவர் கடந்த 2023-ம் ஆண்டு சிறப்பு படை காவலராக பணியில் சேர்ந்தார். சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பாதுகாப்பு பணியில் மகாலிங்கம் நேற்று ஈடுபட்டிருந்தார். இந்த நிலையில், இன்று அதிகாலை தனது துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.  இந்த சம்பவம் குறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். 

அப்போது  தனது தற்கொலைக்குக் காரணம் யாரும் இல்லை என்று கடிதம் எழுதி வைத்துவிட்டு இந்த விபரீத முடிவை எடுத்தது தெரிய வந்தது. உயர்நீதிமன்ற பாதுகாப்புப் பணியில் இருந்த காவலர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் காவல்துறை வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Kathiravan
Published By

Kathiravan

Editor / Reporter

தமிழ் செய்திகள் மற்றும் நடப்பு நிகழ்வுகள் தொடர்பான செய்திகளை வாசகர்களுக்கு துல்லியமாகவும் தெளிவாகவும் வழங்கும் செய்தியாளர்.

Published:

இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருந்ததா?

உங்கள் விருப்பத்தைத் தந்து எங்களை ஊக்குவியுங்கள்!

கருத்துப்பெட்டி (Comments)

உங்கள் பின்னூட்டத்தை உள்ளிடவும் (Enter Your Comment)

இந்த செய்திக்கு இன்னும் கருத்து வரவில்லை. முதல் ஆளாக நீங்களே பதிவிடுங்கள்!