News Logo
முகப்பு தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா தொழில்நுட்பம் வேளாண்மை கல்வி சுற்றுலா ஆன்மிகம்
அண்மைச் செய்தி
முக்கிய பிரிவுகள்
முகப்பு அண்மைச் செய்திகள்
தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா தொழில்நுட்பம் வேளாண்மை கல்வி சுற்றுலா ஆன்மிகம்
தமிழ்நாடு

IPS அதிகாரிகளின் பதவி உயர்வு பட்டியல் தயார்.

IPS அதிகாரிகளின் பதவி உயர்வு பட்டியல் தயார்.
0 கருத்துக்கள்

IPS அதிகாரிகளின் பதவி உயர்வு பட்டியல் தயார்.


  • ADGP டேவிட்சன் தேவாசீர்வாதம் உட்பட 3 பேர் DGP யாக பதவி உயர்வு பெறுகின்றனர்.


 தமிழகத்தில் பணியாற்றி வரும் ஐபிஎஸ் அதிகாரிகளுக்கான பதவி உயர்வு பட்டியல் தயாராகி தலைமைச் செயலாளர் முருகானந்தம் கையெழுத்திட்டு ஒப்புதல் வழங்கி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

 தமிழகத்தில் பணியாற்றும் உதவி எஸ்பிக்கள் முதல் கூடுதல் டிஜிபி வரை உள்ள ஐபிஎஸ் அதிகாரிகள் 40 பேர் பதவி உயர்வு பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.

 அதன்படி சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம், மற்றும் கூடுதல் டிஜிபிக்கள் சந்திப் மீட்டல், பாலநாக தேவி ஆகியோர் டிஜிபிக்களாக பதவி உயர்வு பெறுகின்றனர். 

 தென் மண்டல ஐஜி பிரேம் ஆனந்த் சின்கா உட்பட 7 ஐஜிக்கள் கூடுதல் டிஜிபிக்களாக பதவி உயர்வு பெறுகின்றனர்.

 அதேபோல் 3 டிஐஜிக்கள் ஐஜியாக பதவி உயர்வு பெறுகின்றனர்.

 சென்னை ஆவடி 5வது பட்டாலியன் கமாண்டராக உள்ள எஸ்பி மணிவண்ணன் ஐபிஎஸ் உட்பட 14 ஐபிஎஸ் அதிகாரிகள் டிஐஜி-களாக பதவி உயர்வு பெறுகின்றனர்.

 அதேபோல் புதிதாக ஐபிஎஸ் அதிகாரிகளாக பணியில் நியமிக்கப்பட்டுள்ள 13 ஏஎஸ்பிக்கள் எஸ்பிக்களாக பதிவு உயர்வு பெறுகின்றனர்.

 இந்தப் பதவி உயர்வு பட்டியல் வரும் வாரத்தில் என்று தெரிகிறது. இதையடுத்து ஐபிஎஸ் அதிகாரிகளின் பணி மாறுதல்களும் பெரிய அளவில் நடைபெற இருக்கிறது.


Kathiravan
Published By

Kathiravan

Editor / Reporter

தமிழ் செய்திகள் மற்றும் நடப்பு நிகழ்வுகள் தொடர்பான செய்திகளை வாசகர்களுக்கு துல்லியமாகவும் தெளிவாகவும் வழங்கும் செய்தியாளர்.

Published:

இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருந்ததா?

உங்கள் விருப்பத்தைத் தந்து எங்களை ஊக்குவியுங்கள்!

கருத்துப்பெட்டி (Comments)

உங்கள் பின்னூட்டத்தை உள்ளிடவும் (Enter Your Comment)

இந்த செய்திக்கு இன்னும் கருத்து வரவில்லை. முதல் ஆளாக நீங்களே பதிவிடுங்கள்!