பெஸ்டம்பர் '26: 52 ஆண்டுகளைக் கடந்தும் குறையாத இளமையோடு
மென்மேலும் மிளிர்கிறது!
தேசிய தொழில்நுட்பக் கழகம், திருச்சிராப்பள்ளி,
செப்டம்பர் 25 முதல் 27 வரை 2026-ஆம் ஆண்டு நடத்தப்பட்ட தனது வருடாந்திரப்
பண்பாட்டுத் திருவிழாவான பெஸ்டம்பர்-ன் 52-வது பதிவை வெற்றிகரமாக நிறைவு செய்தது. மூன்று நாட்களில், நாடு முழுவதிலுமிருந்து 70-க்கும்
மேற்பட்ட கல்லூரிகளிலிருந்து 10,000-த்திற்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்களை
இவ்விழா தன்வசம் ஈர்த்தது. 12 வெவ்வேறு பிரிவுகளின் கீழ் நடத்தப்பட்ட சுமார் 60 போட்டிகளில் மாணவர்கள் தங்கள் திறமை களை வெளிப்படுத்தினர்.
ஒட்டு மொத்த சாம்பியன் பட்டத்தை தஞ்சை சாஸ்த்ரா கல்லூரி வென்றது.
பெஸ்டம்பர் 26' விழாவை முதன்மைப் பங்காளராக கோக்க கோலா
நிறுவனமும், இணை முதன்மைப் பங்காளராக டொயோட்டா நிறுவனமும்,
,இன்கிரிடிபிள் இந்தியா காப்பாளர்களாகவும் செயல்பட்டன. மேலும் ரியல்மி,
இந்தியன் ஆயில், மேரியட், சிட்டி யூனியன் வங்கி, தின்க் மியூசிக் மற்றும் ரீகால் உள்ளிட்ட பல நிறுவனங்கள் இந்நிகழ்வுக்கு ஆதரவளித்தன.
தொடக்க விழாவில் பேராசிரியர்
மல்லிகார்ஜுனா வரவேற்புரையாற்றினார். பெஸ்டம்பர் '26-தலைவர் ஸ்ரீராம், இந்த ஆண்டின் சிறப்பு அம்சங்களை எடுத்துரைத்தார். மாணவர்
நலத்த்துறை தலைவர் முனைவர் ஜஸ்டின் ஜோசப், தேசிய தொழில்நுட்பக் கழக இயக்குநர் முனைவர். ஜி. அகிலா,
பே ராசிரியர் டாக்டர். எம். வெங்கட கிர்த்திகா, சிறப்பு விருந்தினர்களான உதவி ஆட்சியர் ராகுல் ராகவன் ஐ.ஏ.எஸ் மற்றும் 1978 பொறியியல்
பிரிவு முன்னாள் மாணவர் திரு. கே .எஸ். சந்திரசேகரன் கலந்து கொண்டு பேசினர். கலை நிகழ்ச்சிகளுடன் விழா நிறை வடைந்தது.
உயர்தனிச் செம்மொழி, சகலகலா வல்லவன் மற்றும் தெலுங்கு டாக்கீஸ் உள்ளிட்ட பிராந்திய மொழி நிகழ்வுகள் உற்சாகமான பங்கேற்பை ஈர்த்தன.
இசை , ஸ்ருதிலயா, நடனம் மற்றும் நாடகம் ஆகிய கலை க் கூடங்கள் காலை
முதல் மாலை வரை களை கட்டின.
கலை , புகைப்படம் மற்றும் ஃபேஷன் பிரிவுகள் ஃபேஷன்டாஸ், சுவர் ஓவியம்,
உடல் ஓவியம், ஓவிய மராத்தான், மேக்ரோ புகைப்படம் எடுத்தல்
மற்றும்'மிஸ்டர் & மிஸ் பெஸ்டம்பர்' ஆகிய போட்டிகள் நடத்தப்பட்டன.
நடிகர் வசந்த் ரவி "கார்பேடியம்" என்ற தலை ப்பில் உரையாற்றினார்
பிக்காசோ திரை ப்படத்தின் விளம்பர நிகழ்வாக அமைந்த "ஓபஸ்
லூமினே ர்")அமர்வில் கெளதம் சிவராமன், சுரபி செ ல்வன், அபிஷன் ஜவீ,
யோகலட்சுமி மற்றும் கானா வினோத் ஆகியோர் கலந்து கொண்டு
சுவாரஸ்யமாக உரையாடினர்.
'சீயூ' திரை ப்படக் குழுவினர் கிஷே ன் தாஸ், ஜெ மெ ன், அருண், அக்ஷயா மற்றும் சந்தோஷ் ஆகியோர், படத்தின் இரண்டாவது பாடலை வெளியிட பெஸ்டம்பர் விழாவைத் தேர்ந்தெ டுத்தனர். பாடலை வெளியிட்டதுடன் அவர்கள் ஆற்றிய நேரடி இசை நிகழ்ச்சியும் பெரும் வரவேற்பைப் பெற்றது.
இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ், 'டோரதி' திரை ப்படத்தை விளம்பரப்படுத்த சனந்த்
மற்றும் ரிஷிகாந்துடன் வளாகத்திற்கு வருகை தந்தார்; இவ்விழாவிலேயே மிக
அதிகமான கூட்டத்தை ஈர்த்த நிகழ்வுகளில் ஒன்றாக இது அமைந்தது.
மூன்று இரவுகள், எண்ணற்ற நினைவுகள்
ஃபெஸ்டம்பரின் சிறப்பு கலை நிகழ்ச்சிகள் ஒவ்வொரு இரவிற்கும் ஒரு
தனித்துவமான அழகைச் சேர்த்தன. முதல் நாள் இரவில், திங்க் மியூசிக்
வழங்கிய எலக்ட்ரிக் ராக்நை ட் நிகழ்வில் டிஜே லாஷ், பாடகர்கள் பிரித்வி, தமிழ்
மற்றும் ரூத் ஆகியோரின் இசை மாலை யின் கலைத் தொடக்கத்திற்குப்
புத்துயிரூட்டியது. இரண்டாவது நாள் இரவில், ரெட் புல் டைரக்ஷன்ஸ் டி.ஜே . கியாரா மற்றும் டி.ஜே . ஷான் அதிரவைத்த இசை நிகழ்ச்சி, ஒட்டுமொத்த
அரங்கையும் மாறாத உற்சாக வெள்ளத்தில் மூழ்கடித்தது.
சின்மயி ஸ்ரீபாடா, தனது
உணர்வுபூர்வமான மற்றும் அரவணை ப்பான குரலில் பாடி அனைவரையும்
கட்டிப்போட்டார் .
நிறைவு விழாவில் பேராசிரியர்கள் முனை வர். மல்லிகார்ஜுனா
மற்றும் முனைவர். எம். வெங்கட கிர்த்திகா, மாணவர் நலத்துறை தலை வர்
முனைவர். ஆர். ஜஸ்டின் ஜோசப் மற்றும் மாணவர் நலத்துறை இணைத்
தலைவர் டாக்டர். ஸ்ரீஜித் ஆகியோர் இந்நிகழ்வைச் சிறப்பித்தனர்.
பண்பாட்டுச் செயலாளர் அஸ்வத் பண்பாட்டு அறிக்கையைச் சமர்ப்பித்தார்.
சந்தைப்படுத்தல் அணியின் தலைவர் ரோகன் கணபதி சந்தை ப்படுத்தல்
அறிக்கையையும், ஊடகத் தொடர்பு அணியின் தலைவர் அனிருத் ஊடக
அறிக்கையையும் சமர்ப்பித்தனர். முன்னாள் மாணவர் மற்றும் சமூகத் தொடர்பு பிரிவு மோகனவே லு, இந்த ஆண்டின் சமூகநல முன்னெடுப்புகளை
பகிர்ந்து கொண்டார்.
வெற்றி பெற்ற சாஸ்த்ரா கல்லூரிக்கு 'ஃபெ ஸ்டம்பர் 26
‘ஒட்டு மொத்த சாம்பியன்’ பட்டத்தை வழங்கபட்டது. ஃபெ ஸ்டம்பர் '26-ன்
பொருளாளர் சுந்தர வள்ளியப்பன் நன்றியுரை அளித்த பின் தேசிய
கீதத்துடன் விழா நிறைவுபெற்றது.