News Logo
முகப்பு தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா தொழில்நுட்பம் வேளாண்மை கல்வி சுற்றுலா ஆன்மிகம் விளையாட்டு உணவு ஜோதிடம் நலம்
அண்மைச் செய்தி
முக்கிய பிரிவுகள்
முகப்பு அண்மைச் செய்திகள் பிரீமியம் கட்டுரைகள்
தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா தொழில்நுட்பம் வேளாண்மை கல்வி சுற்றுலா ஆன்மிகம் விளையாட்டு உணவு ஜோதிடம் நலம்
Advertisement / விளம்பரம்

உங்கள் வணிகத்தை லட்சக்கணக்கான வாசகர்களிடம் கொண்டு சேர்க்க வேண்டுமா?

இணையதளத்தின் முதன்மைப் பக்கங்களில் மிகக் குறைந்த கட்டணத்தில் விளம்பரம் செய்ய உடனே எங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்.

இந்தியா

வணிக பயன்பாட்டுக்கான எல்பிஜி சிலிண்டர் விலை ரூ.172 குறைவு:

வணிக பயன்பாட்டுக்கான எல்பிஜி சிலிண்டர் விலை ரூ.172 குறைவு:
NEWS TODAY TAMIL
Updated on: 01 Jul 2026, 12:00 am 2 min read
0 கருத்துக்கள்

புதுடெல்லி: வணிகப் பயன்பாட்டுக் கான எல்பிஜி சிலிண்டர்களின் விலையை எண்ணெய் நிறுவனங் கள் குறைத்துள்ளன. இன்று வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பின் படி, சென்னையில் வணிக சிலிண்டரின் விலை ரூ.172.50 குறைக்கப்பட்டுள்ளது. இந்த விலை மாற்றம் இன்று (ஜூலை 1) முதல் நாடு முழுவதும் அமலுக்கு வந்துள்ளது.

இந்த விலைக்குறைப்புக்குப் பிறகு, சென்னையில் 19 கிலோ எடை கொண்ட வணிக சிலிண்டரின் விலை ரூ.3,106 ஆகக் குறைந்துள்ளது. எனினும், வீட்டு உபயோகத்திற்கான 14.2 கிலோ எல்பிஜி சிலிண்டர் நுகர்வோருக்கு இந்த முறை எந்தவித விலைக் குறைப்பும் அறிவிக்கப்படவில்லை. வீட்டு உபயோக சிலிண்டரின் விலை எவ்வித மாற்றமுமின்றி ரூ.957.50 என்ற அளவிலேயே நீடிக்கிறது.

இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களைத் தொடர்ந்து, உலகளவில் கடுமை யான எரிசக்தி தட்டுப்பாடு ஏற்பட்டது. அதன் எதிர்வினையாக, உலக கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயுப் போக்குவரத்தின் முக்கியப் பாதையான ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து கப்பல் போக்குவரத்தை முடக்கியது. இதன் காரணமாக சர்வதேச சந்தையில் எரிபொருட்களின் விலை கடுமையாக உயர்ந்தது.

இந்த தடையைச் சுட்டிக்காட்டி, இந்திய எண்ணெய் நிறுவனங்கள் கடந்த நான்கு மாதங்களில் மட்டும் வணிக சிலிண்டரின் விலையை நான்கு தவணைகளாக உயர்த்தின. அதேபோல், வீட்டு உபயோக சிலிண்டரின் விலையும் மார்ச் மற்றும் ஜூன் மாதங்களில் உயர்த்தப் பட்டது. தற்போது ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல் போக்குவரத்து ஓரளவுக்கு சீராக தொடங்கியுள்ள சூழலில், வணிக சிலிண்டரின் விலையை எண்ணெய் நிறுவனங் கள் முதன்முறையாகக் குறைத்திருப் பது குறிப்பிடத்தக்கது

.


இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருந்ததா?

உங்கள் விருப்பத்தைத் தந்து எங்களை ஊக்குவியுங்கள்!

கருத்துப்பெட்டி (Comments)

உங்கள் பின்னூட்டத்தை உள்ளிடவும் (Enter Your Comment)

இந்த செய்திக்கு இன்னும் கருத்து வரவில்லை. முதல் ஆளாக நீங்களே பதிவிடுங்கள்!

Advertisement / விளம்பரம்

உங்கள் வணிகத்தை லட்சக்கணக்கான வாசகர்களிடம் கொண்டு சேர்க்க வேண்டுமா?

இணையதளத்தின் முதன்மைப் பக்கங்களில் மிகக் குறைந்த கட்டணத்தில் விளம்பரம் செய்ய உடனே எங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்.