News Logo
முகப்பு தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா தொழில்நுட்பம் வேளாண்மை கல்வி சுற்றுலா ஆன்மிகம்
அண்மைச் செய்தி
முக்கிய பிரிவுகள்
முகப்பு அண்மைச் செய்திகள்
தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா தொழில்நுட்பம் வேளாண்மை கல்வி சுற்றுலா ஆன்மிகம்
தமிழ்நாடு

துருக்கியில் விமான விபத்து- லிபியா ராணுவ தளபதி உள்பட 7 பேர் பலி

துருக்கியில் விமான விபத்து- லிபியா ராணுவ தளபதி உள்பட 7 பேர் பலி
0 கருத்துக்கள்

துருக்கியில் நடந்த விமான விபத்தில் லிபியா ராணுவ தளபதி முகமது அலி அகமது அல் ஹதாத் உட்பட 7 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

லிபியாவில் உள்நாட்டு போர் நடந்து வருகிறது. இந்த நிலையில்,  லிபியாவில், ஐக்கிய நாடுகள் சபை மற்றும் அமெரிக்கா, துருக்கி உள்ளிட்ட நாடுகளால் அங்கீகரிக்கப்பட்ட அரசு, தலைநகர் டிரிப்போலியை தலைமையிடமாக கொண்டு செயல்படுகிறது. இதை எதிர்க்கும் போட்டி அரசு லிபியாவின் கிழக்குப் பகுதியை மையமாகக் கொண்டு செயல்படுகிறது. 

இந்த சூழலில், துருக்கியில் நடைபெற்ற உயர்மட்டக்குழு கூட்டத்தில் லிபியா ராணுவ தளபதி முகமது அலி அகமது அல் ஹதாத் பங்கேற்றார். இந்த கூட்டம் முடிந்த பின் லிபியாவின் ராணுவ தளபதி, நான்கு அதிகாரிகள் மற்றும் மூன்று பணியாளர்களை ஏற்றிச் சென்ற தனியார் ஜெட் விமானம் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில், லிபிய ராணுவ தளபதி  முகமது அலி அகமது அல் ஹதாத் உட்பட 7 பேர் உயிரிழந்தனர்.

விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறே விபத்துக்கு காரணம் என லிபியா அதிகாரிகள் தெரிவித்தனர். விமானம் புறப்பட்ட 40 நிமிடங்களில் தொடர்பை இழந்தது. பின்னர் அவசரமாக விமானத்தை தரையிறக்க முயற்சித்த போது தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டு கீழே விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது என துருக்கி உள்துறை அமைச்சர் அலி யெர்லிகாயா தெரிவித்துள்ளார். 

Kathiravan
Published By

Kathiravan

Editor / Reporter

தமிழ் செய்திகள் மற்றும் நடப்பு நிகழ்வுகள் தொடர்பான செய்திகளை வாசகர்களுக்கு துல்லியமாகவும் தெளிவாகவும் வழங்கும் செய்தியாளர்.

Published:

இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருந்ததா?

உங்கள் விருப்பத்தைத் தந்து எங்களை ஊக்குவியுங்கள்!

கருத்துப்பெட்டி (Comments)

உங்கள் பின்னூட்டத்தை உள்ளிடவும் (Enter Your Comment)

இந்த செய்திக்கு இன்னும் கருத்து வரவில்லை. முதல் ஆளாக நீங்களே பதிவிடுங்கள்!