News Logo
முகப்பு தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா தொழில்நுட்பம் வேளாண்மை கல்வி சுற்றுலா ஆன்மிகம் விளையாட்டு உணவு ஜோதிடம் நலம்
அண்மைச் செய்தி
முக்கிய பிரிவுகள்
முகப்பு அண்மைச் செய்திகள் பிரீமியம் கட்டுரைகள்
தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா தொழில்நுட்பம் வேளாண்மை கல்வி சுற்றுலா ஆன்மிகம் விளையாட்டு உணவு ஜோதிடம் நலம்
Advertisement / விளம்பரம்

உங்கள் வணிகத்தை லட்சக்கணக்கான வாசகர்களிடம் கொண்டு சேர்க்க வேண்டுமா?

இணையதளத்தின் முதன்மைப் பக்கங்களில் மிகக் குறைந்த கட்டணத்தில் விளம்பரம் செய்ய உடனே எங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்.

இந்தியா

காலையிலேயே 9 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்- அவசரமாக வெளியேற்றப்பட்ட மாணவர்கள்

காலையிலேயே 9 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்- அவசரமாக வெளியேற்றப்பட்ட மாணவர்கள்
NEWS TODAY TAMIL
Updated on: 09 Feb 2026, 12:00 am 2 min read
0 கருத்துக்கள்

டெல்லியில் 9 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுவிக்கப்பட்டதையடுத்து  மாணவர்கள் வெளியேற்றப்பட்டு சோதனைகள் நடந்து வருகின்றன

டெல்லி முழுவதும் உள்ள 9  பள்ளிகளை குறிவைத்து மின்னஞ்சல்கள் மூலம் வெடிகுண்டு மிரட்டல் இன்று (பிப்ரவரி 9) வந்தது.  காலை 8:30 மணி முதல் காலை 9:00 மணி வரை டெல்லியில் உள்ள பிரபல பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்கள் வந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து டெல்லி காவல்துறைக்கு தெரிவிக்கப்பட்டது. இதனால் சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்கு காவல்துறை, தீயணைப்பு குழுக்கள் மற்றும் வெடிகுண்டு அகற்றும் படை விரைந்தன.

வெடிகுண்டு மிரட்டல் விடப்பட்ட பள்ளிகளில் இருந்து மாணவர்கள் மற்றும் ஊழியர்கள் உடனடியாக வளாகத்திலிருந்து வெளியேற்றப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர். இதையடுத்து வெடிகுண்டை தேடும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. இந்த வெடிகுண்டு மிரட்டலால் மாணவர்களின் பெற்றோர் மற்றும் பள்ளி நிர்வாகிகள் மத்தியில்  அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கு முன்னதாக, ஜனவரி 29-ம் தேதி காலை  டெல்லியில் உள்ள ஐந்து பள்ளிகளுக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல்கள் வந்தன. இந்த பள்ளிகளில் நடத்தப்பட்ட தீவிர சோதனைகளுக்குப் பிறகு அந்த மிரட்டல்கள்  புரளி என தெரிய வந்தது. இந்த சம்பவத்தில் குறிவைக்கப்பட்ட பள்ளிகள் டெல்லி கண்டோன்மென்ட்டில் உள்ள லோரெட்டோ கான்வென்ட், சித்தரஞ்சன் பூங்காவில் உள்ள டான் போஸ்கோ பள்ளி மற்றும் ஆனந்த் நிகேதன் மற்றும் துவாரகாவில் உள்ள கார்மல் கான்வென்ட் வளாகங்கள் ஆகியவை அடங்கும். அதற்கு ஒரு நாள் முன்பு ( ஜனவரி 28)  துவாரகா நீதிமன்ற வளாகத்திற்கும் வெடிகுண்டு மிரட்டல் வந்தது, அது புரளி என கண்டுபிடிக்கப்படடது. மீண்டும், மீண்டும் வரும் மிரட்டல்களின் மூலத்தைக் கண்டறிய விசாரணைகள் நடந்து வருவதாக டெல்லி காவல்துறை அதிகாரிகள்  தெரிவித்தனர், புரளிகளுக்குப் பொறுப்பானவர்கள் மீது கடுமையான நடவடிக்கையை எதிர்கொள்ள நேரிடும் என்றும் காவல்துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். 

இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருந்ததா?

உங்கள் விருப்பத்தைத் தந்து எங்களை ஊக்குவியுங்கள்!

கருத்துப்பெட்டி (Comments)

உங்கள் பின்னூட்டத்தை உள்ளிடவும் (Enter Your Comment)

இந்த செய்திக்கு இன்னும் கருத்து வரவில்லை. முதல் ஆளாக நீங்களே பதிவிடுங்கள்!

Advertisement / விளம்பரம்

உங்கள் வணிகத்தை லட்சக்கணக்கான வாசகர்களிடம் கொண்டு சேர்க்க வேண்டுமா?

இணையதளத்தின் முதன்மைப் பக்கங்களில் மிகக் குறைந்த கட்டணத்தில் விளம்பரம் செய்ய உடனே எங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்.