News Logo
முகப்பு தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா தொழில்நுட்பம் வேளாண்மை கல்வி சுற்றுலா ஆன்மிகம் விளையாட்டு
அண்மைச் செய்தி
முக்கிய பிரிவுகள்
முகப்பு அண்மைச் செய்திகள்
தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா தொழில்நுட்பம் வேளாண்மை கல்வி சுற்றுலா ஆன்மிகம் விளையாட்டு
வேளாண்மை

அக்ரி ஸ்டார்ட் அப் திருவிழா 3.O’

அக்ரி ஸ்டார்ட் அப் திருவிழா 3.O’
0 கருத்துக்கள்

சத்குருவின் மண் காப்போம் இயக்கம் சார்பில் ‘அக்ரி ஸ்டார்ட் அப் திருவிழா 3.O’


திண்டுக்கல்லில் வரும் அக். 4 ஆம் தேதி நடைபெற உள்ளது


மதுரை,


சத்குருவின் ‘மண் காப்போம்’ இயக்கம் மற்றும் ஜி.டி.என். கல்வி நிறுவனங்கள் இணைந்து நடத்தும் ‘அக்ரி ஸ்டார்ட் அப் திருவிழா 3.O’ எனும் வேளாண் புத்தாக்கத் தொழில்கள் தொடர்பான கருத்தரங்கு, திண்டுக்கல்லில் உள்ள ஜி.டி.என். கலைக் கல்லூரியில் வரும் அக்டோபர் 4-ஆம் தேதி நடைபெற உள்ளது.


இது தொடர்பான பத்திரிகையாளர் சந்திப்பு மதுரையில் இன்று (01/10/2026) நடைபெற்றது. இதில் மண் காப்போம் இயக்க ஒருங்கிணைப்பாளர் சுவாமி ஸ்ரீமுகா கருத்தரங்கு குறித்து பேசினார். இவருடன் தனா உணவுப் பொருட்கள் நிறுவனத்தின் நிறுவனர் தனலட்சுமி விக்னேஷ், ஜி.டி.என். கலைக் கல்லூரியின் துணை முதல்வர் பேராசிரியர் முனைவர் யு. நடராஜன் மற்றும் ஈஷா மண் காப்போம் இயக்கத்தின் கள ஒருங்கிணைப்பாளர் பார்த்திபன் பூமலை ஆகியோர் பங்கேற்றனர்.


விவசாயத்தில் விளைபொருட்களை உற்பத்தி செய்வதோடு நின்று விடாமல் மதிப்புக்கூட்டல், பிராண்டிங், சந்தைப்படுத்தல், தொழில்நுட்பம் மற்றும் நேரடி சந்தை வாய்ப்புகள் மூலம் விவசாயத்தை ஒரு வெற்றிகரமான தொழிலாக மாற்றுவதற்கான புதிய வாய்ப்புகளை அறிமுகப்படுத்தும் வகையில், சத்குருவின் ‘மண் காப்போம்’ இயக்கம் மற்றும் ‘ஜி.டி.என். கல்வி நிறுவனங்கள்’ இணைந்து “அக்ரி ஸ்டார்ட் அப் திருவிழா 3.O” கருத்தரங்கை அக்டோபர் 4-ஆம் தேதி திண்டுக்கல்லில் நடத்த உள்ளன.


“விவசாயத்தைத் தொழிலாக்க, தொழிலை அடையாளமாக்க!” என்ற கருப்பொருளில் இந்தக் கருத்தரங்கு நடைபெற உள்ளது. விளைபொருளை உற்பத்தி செய்வது முதல் சந்தையின் அடையாளமாக தொழிலை மேம்படுத்துவது, டிஜிட்டல் மற்றும் சமூக ஊடகங்கள் வழியே வாடிக்கையாளரைச் சென்றடைவது வரையிலான அனைத்து அம்சங்களையும் ஒரே இடத்தில் வழங்கும் வகையில் இக்கருத்தரங்கு திட்டமிடப்பட்டு உள்ளது

விவசாயிகள், இளைஞர்கள், பெண்கள், வேளாண் மற்றும் உணவுப் பொருட்கள் சார்ந்த தொழில்முனைவோர்கள், வேளாண் சார் தொழில்நுட்பத்தில் ஆர்வமுள்ளவர்கள் என அனைவருக்கும் வழிகாட்டும் சிறந்த தளமாக இக்கருத்தரங்கு அமைய உள்ளது. சுமார் 3,000-க்கும் மேற்பட்டோர் பங்கேற்க உள்ள இந்நிகழ்வில் 100-க்கும் மேற்பட்ட வேளாண் கண்காட்சி அரங்குகளும் அமைக்கப்பட உள்ளன.


இந்தக் கருத்தரங்கின் சிறப்பு அம்சமாக, பங்கேற்பாளர்களுக்கு முழுமையான வழிகாட்டுதல்களை வழங்குவதற்காக 4 முக்கியப் பிரிவுகளைச் சேர்ந்த நிபுணர்கள் இதில் பங்கேற்று உரையாற்ற உள்ளனர்.


வேளாண் தொழில் வளர்ச்சி வல்லுநர்கள், வேளாண் சார் தொழில் முனைவோர்கள், வேளாண் தொழிலில் புதுமைகளை உருவாக்கும் முன்னோடிகள் மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்ப வல்லுநர்கள் ஆகிய 4 வெவ்வேறு துறை சார்ந்த நிபுணர்கள் கலந்துகொண்டு தங்களது அனுபவங்களையும், தொழில்நுட்பத் தீர்வுகளையும் பகிர்ந்துகொள்ள உள்ளனர்.

தொழில் வளர்ச்சி வல்லுநர்கள்


இயற்கை மற்றும் வேளாண் பொருட்களுக்கான சந்தை வாய்ப்புகள், அரசு திட்டங்கள் குறித்து தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் வேளாண் வணிக மேம்பாட்டுப் பிரிவு இயக்குநர் முனைவர் சோமசுந்தரம் வழிகாட்ட உள்ளார்.

மேலும், பெரியகுளம் தோட்டக்கலை வணிக மையத்தின் முதன்மைச் செயல் அலுவலர் வசந்தன் செல்வம், ஒரு பொருளை வெற்றிகரமான தொழிலாக மாற்றுவது குறித்தும், யு.டி.எம் பிராண்டிங் நிறுவனத்தின் இணை நிறுவனர் திலீப் பாபு பிராண்டிங் மற்றும் பேக்கேஜிங் குறித்தும், தேனி மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை முனைவர் சசி தீபா உணவு பாதுகாப்பு உரிமங்கள் மற்றும் ஏற்றுமதி நடைமுறைகள் குறித்தும் விவரிக்க உள்ளனர்.


வேளாண் சார்ந்த தொழில் முனைவோர்கள்


வேளாண் விளைபொருட்களில் இருந்து மதிப்புக்கூட்டல் செய்து வெற்றி கண்ட தொழில்முனைவோர்கள் தங்களது நேரடி அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளவுள்ளனர்.


இதில் பிரிஷிகோ ஃபுட்ஸ் நிறுவனர் சிந்துஜா வெற்றிச்செல்வன் சிறு தானிய உணவுப் பொருட்கள் உற்பத்தி குறித்தும், ஊர்மணம் ஃபுட்ஸ் நிறுவனர் தீபா பாரம்பரிய உணவுகள் குறித்தும், மற்றும் அகவெளி ஆர்கானிக்ஸ் நிறுவனர் அன்புராஜா இயற்கை விவசாயம் மூலம் ₹50 லட்சம் வருமானம் ஈட்டும் தன்னுடைய வெற்றிப் பயணம் குறித்தும் விவரிக்க உள்ளனர்.


வேளாண் புதுமையாளர்கள்


“நோயைத் தடுக்க, பயிரைக் காக்க, தரத்தை அறிய, லாபத்தை உயர்த்த!” என்ற தலைப்பில் கலந்துரையாடல் அமர்வு நடைபெறுகிறது.


இதில், கைமர் டெக் நிறுவனர் முனைவர் ராகுல் பரமசிவம் கால்நடை பராமரிப்புத் தொழில்நுட்பம் குறித்தும், கிராப் என்ஜின் நிறுவனர் முனைவர் செல்வ விநாயகம் இணையவழிப் பொருட்களின் தொழில்நுட்பம் மூலம் பயிர்களைப் பாதுகாப்பது குறித்தும் பேச உள்ளனர்.


மேலும், கிரீன் காலர் அக்ரிடெக் சொல்யூஷன்ஸ் நிறுவனர் பத்மினி சம்பத் விளைபொருட்களின் தரத்தைப் பரிசோதிக்கும் தொழில்நுட்பம் குறித்தும், மைக்கோ மேட்ரிக்ஸ் நிறுவனர் கெளதம் தாஸ் காளான் வளர்ப்பில் பயன்படும் தானியங்கித் தொழில்நுட்பம் குறித்தும் தங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ள உள்ளனர்.


இணையவழி தொழில்நுட்ப (டிஜிட்டல்) வல்லுநர்கள்



இதனுடன் “குறைந்த செலவில் டிஜிட்டல் ஊடகங்கள் மூலம் தொழிலை வளர்ப்பது எப்படி?” என்ற தலைப்பில் கலந்துரையாடல் நடைபெறுகிறது.


இதனை மை ஹார்வெஸ்ட் ஃபார்ம்ஸ் நிறுவனர் அர்ச்சனா ஸ்டாலின் வழிநடத்துகிறார். இதில் ஜார் டெக் இணை நிறுவனர் கமல கண்ணன் இணையவழி விற்பனை வாய்ப்புகள் குறித்துப் பேசுகிறார். மேலும், மண் காப்போம் இயக்கத்தின் டிஜிட்டல் ஊடக பிரிவுத் தலைவர் விவேக் பரமசிவம் சமூக ஊடகங்கள் மூலம் வாடிக்கையாளர்களைக் கவரும் வழிகளைப் பற்றிப் பேச உள்ளார்.


இக்கருத்தரங்கு வருகிற அக்டோபர் 04, ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை திண்டுக்கல் ஜி.டி.என். கலைக் கல்லூரியில் நடைபெறவுள்ளது. இந்நிகழ்வில் பங்கேற்க முன்பதிவு கட்டாயமாகும். 83000 93777 என்ற எண்ணைத் தொடர்புகொண்டோ அல்லது https://forms.gle/EudJG6PVBovPc6KF8 என்ற இணைப்பின் வழியாகவோ முன்பதிவு செய்து கொள்ளலாம்.


Kathiravan
Published By

Kathiravan

Editor / Reporter

தமிழ் செய்திகள் மற்றும் நடப்பு நிகழ்வுகள் தொடர்பான செய்திகளை வாசகர்களுக்கு துல்லியமாகவும் தெளிவாகவும் வழங்கும் செய்தியாளர்.

Published:

இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருந்ததா?

உங்கள் விருப்பத்தைத் தந்து எங்களை ஊக்குவியுங்கள்!

கருத்துப்பெட்டி (Comments)

உங்கள் பின்னூட்டத்தை உள்ளிடவும் (Enter Your Comment)

இந்த செய்திக்கு இன்னும் கருத்து வரவில்லை. முதல் ஆளாக நீங்களே பதிவிடுங்கள்!