வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது ஜிஎஸ்எல்வி எஃப்-18 ராக்கெட்
விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட அதிநவீன என்விஎஸ்-03 வழிகாட்டி செயற்கைக்கோளுடன் ஜிஎஸ்எல்வி - எஃப் 18 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.
நிா்ணயிக்கப்பட்ட புவி வட்டப் பாதையில் செயற்கைக்கோள் நிலைநிறுத்தப்பட்டதைத் தொடா்ந்து இந்தத் திட்டம் வெற்றிபெற்றதாக இஸ்ரோ விஞ்ஞானிகள் அறிவித்தனா்.
இதன்மூலம் இனிவரும் காலங்களில் பாதுகாப்புத் துறை, பொதுமக்கள் பயன்பாடு மற்றும் தொலைத்தொடா்பு நடவடிக்கைகளில் துல்லியமான வழிகாட்டுதல்களை (நேவிகேஷன்) பெற முடியும்.