மதுரை மத்திய தொகுதி தவெக எம்எல்ஏ முஸ்தபாவிடம் குதிரை பேர முயற்சியில் ஈடுபட்டதாக அதிமுக கொள்கைப் பரப்புத் துணைச் செயலாளரும், மதுரை முன்னாள் துணை மேயருமான P.M. மன்னன் மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். மன்னனை முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ சந்தித்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில்,
மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் மன்னனை கைது தனி அறையில் வைத்துள்ளனர். Mla முஸ்தபாவும் மன்னனும் நெருங்கிய நண்பர்கள். அடிப்படையில் மாமன் மைத்துனன் என்ற அடிப்படையில் பேசியுள்ளனர். உங்க நிர்வாகிகள் கட்சி பதவிக்கு பணம் வாங்குவதாக ரீல்ஸ் வருகிறதே என எம்எல்ஏ முஸ்தபாவிடம் மன்னன் பேசியுள்ளார். அதற்கு தான் இது போன்ற வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
தற்குறியான குதிரைபேர அரசாக இந்த அரசு உள்ளது.
பணம் கொடுத்து எம்எல்ஏவை வாங்கி ஆட்சியை கவிழ்க்க வேண்டும் என்ற எண்ணம் கடுகளவும் அதிமுகவுக்கு இல்லை. நாங்கள் மக்களை சந்திப்போம், குறுக்குவழியில் ஆட்சியமைக்க வேண்டும் என்ற அவசியமில்லை.இந்த ஆட்சியே கவிழபோகிறது.
முஸ்தபா ஒன்றும் அரிச்சந்திரன் கிடையாது. 22 வார்டு கவுன்சிலர் சீட்டுக்கு பணம் கேட்டவர் அவர்.
இந்த ஆட்சிக்கு இருக்கிற அவப்பெயரை மறைக்க, விலைவாசி உயர்வை மறைக்க இது போன்ற கைது நடவடிக்கை எடுக்கின்றனர். கூட்டுறவு மூலமாக காய்கறிகள் விற்பனை புதம் புதம் கதம் கதம் தான்.
மன்னன் மீதான கைது நடவடிக்கையை அதிமுக சார்பில் கண்டிக்கிறோம். சம்மன் 7 ஆம் தேதி என கொடுத்துவிட்டு இன்றே கைது செய்யும் அளவிற்கு அவர் ஒன்றும் தீவிரவாதி அல்ல. தவெகவினர் போல மன்னன் போதைப்பொருள் விற்பவர் அல்ல. மன்னனை தீவிரவாதி போல அடைத்துவைத்துள்ளனர்.
100 கோடி கொடுத்தாலும் பேரத்துக்கு பணியமாட்டோம் என முஸ்தபா கூறியது குறித்த கேள்விக்கு?
அப்படியானால் 100 கோடிக்கு மேல் முஸ்தபா கேட்கிறாரா? முஸ்தபா ஜாக்பாட்டில் மத்திய தொகுதியில் வெற்றிபெற்றுள்ளார்..
மின்வெட்டு குறித்த கேள்விக்கு?
நேற்று இரவு எங்கள் வீட்டில் மின்சாரம் இல்லை கொசுக்கடியில் இருந்தோம். அறிவிக்கப்படாத மின்வெட்டு உள்ளது.
நிர்மல்குமார் அவரது துறையை சரியாக பாரக்க சொல்லுங்கள்; கடந்த ஆட்சியில் யூனிட் 20 என்றால் இவர்கள் 36 ரூபாய் என்கிறார்கள்; எதிலும் வெளிப்படத்தன்மையோடு இல்லை.
உலகத்திலயே பேசாத முதலமைச்சர் விஜய் மட்டும் தான்; அரசு திட்டம் குறித்து எந்த அறிவிப்பும் இல்லை ; அனைத்து அரசு ஊழியர்களும் போராட்டம் நடத்திவருகின்றனர். மக்கள் இந்த ஆட்சியை தூக்கி எறிவார்கள். இந்த அரசு எவ்வளவு விரைவாக முடிகிறதோ அப்போது மக்கள் மகிழ்ச்சியடைவார்கள், சிறுமிகள் காப்பாற்றப்படுவார்கள், அதற்கு உள்ளாட்சி தேர்தல் முடிவே சாட்சியாக இருக்கும் என்றார்.