அதிக நேரம் செல்போனில் கேம் விளையாடியதால் கழுத்து நரம்பு பாதிக்கப்பட்டு அறுவை சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய நடிகை ஷகிலா பொதுமக்களுக்கும் இளைஞர்களுக்கும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அதிக கைப்பேசி பயன்பாட்டால் கழுத்தின் முக்கிய ரத்த நாளங்கள் பாதிக்கப்பட்டன.
படுத்தபடி ஒருபுறமாக சாய்ந்து 4 மணி நேரம் வரை கைப்பேசியில் கேமிங் விளையாடுவேன்.
தவறான உடல் நிலை மற்றும் அதிக கைப்பேசி பயன்பாடு கழுத்து அறுவை சிகிச்சைக்கு வழிவகுத்தது; ரூ.3 லட்சம் செலவானது.
படுக்கையில் இருந்து எழுவது, உணவு சாப்பிடுவது உள்ளிட்ட பணிகளுக்கு கூட உதவி தேவைப்படுகிறது.
தயவுசெய்து தேவைக்கு அதிகமாக கைப்பேசியை பயன்படுத்த வேண்டாம்.
குழந்தைகளுக்கு கைப்பேசி உள்ளிட்ட மின்னணு சாதனங்களை வழங்குவதை பெற்றோர் தவிர்க்க வேண்டும் என்று நடிகை ஷகீலா வேண்டுகோள் விடுத்துள்ளார்.