News Logo
முகப்பு தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா தொழில்நுட்பம் வேளாண்மை கல்வி சுற்றுலா ஆன்மிகம்
அண்மைச் செய்தி
முக்கிய பிரிவுகள்
முகப்பு அண்மைச் செய்திகள்
தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா தொழில்நுட்பம் வேளாண்மை கல்வி சுற்றுலா ஆன்மிகம்
தமிழ்நாடு

தேசத்தின் முதுகெலும்பு உழவர்கள்- நயினார் நாகேந்திரன் புகழாரம்

தேசத்தின் முதுகெலும்பு உழவர்கள்- நயினார் நாகேந்திரன் புகழாரம்
0 கருத்துக்கள்

விவசாயிகளின் உழைப்புக்கு நம் தேசம் என்றும் நன்றியுடன் இருக்கும் என்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார். 

இது தொடர்பாக தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், “நம் பாரத தேசத்தின் முதுகெலும்பாக இருக்கும் உழவர்களுக்கு மரியாதை செலுத்தும் நாள் இன்று. மண்ணின் வாசனையோடு தங்கள் வாழ்க்கையையும் கலந்தவர்கள் உழவர்கள். விதைத்தக்கும் ஒவ்வொரு விதையிலும் நம் எதிர்காலத்தையும் சேர்த்து விதைக்கும் அவர்களின் உழைப்பு தான் இந்த தேசத்தின் உண்மையான செல்வம்.

பசுமை நிறைந்த வயல்களில் பிறக்கும் நம்பிக்கை, உழவர்களின் வியர்வைத் துளிகளால் வளர்கிறது. அவர்களின் கரங்களில் தான் உணவு பாதுகாப்பும் நாட்டின் வளமும் இருக்கிறது. அனைத்து உழவர்களுக்கும் எனது தேசிய உழவர் தின வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். உங்கள் உழைப்புக்கு நம் தேசம் என்றும் நன்றியுடன் இருக்கும்” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Kathiravan
Published By

Kathiravan

Editor / Reporter

தமிழ் செய்திகள் மற்றும் நடப்பு நிகழ்வுகள் தொடர்பான செய்திகளை வாசகர்களுக்கு துல்லியமாகவும் தெளிவாகவும் வழங்கும் செய்தியாளர்.

Published:

இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருந்ததா?

உங்கள் விருப்பத்தைத் தந்து எங்களை ஊக்குவியுங்கள்!

கருத்துப்பெட்டி (Comments)

உங்கள் பின்னூட்டத்தை உள்ளிடவும் (Enter Your Comment)

இந்த செய்திக்கு இன்னும் கருத்து வரவில்லை. முதல் ஆளாக நீங்களே பதிவிடுங்கள்!