வணிக மத்தியஸ்த முறை சமூகத்திற்கு பெரும் பங்காற்றுகின்றன என மதுரையில்
வர்த்தக சபை நடுவர் தீர்ப்பாயம் அரங்கம் திறப்பு விழாவில் உயர்நீதிமன்ற மதுரை கிளை நிர்வாக நீதிபதி சி.வி. கார்த்திகேயன் பேசினார்.
மதுரை காமராஜர் சாலையில் உள்ள தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்க கட்டடத்தில் புதுப்பிக்கப்பட்ட வர்த்தக சபை நடுவர் தீர்ப்பாயம் அரங்கம் திறப்பு விழா தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்க தலைவர் ஜெகதீசன் தலைமையில் நடைபெற்றது. தீர்ப்பாயம் தலைவர் ஹரிஹரன் வர வேற்றார். உயர்நீதிமன்ற மதுரை கிளை நிர்வாக நீதிபதி சி.வி. கார்த்திகேயன் அரங்கத்தை திறந்து வைத்து பேசியதாவது,
'2004ல் தொடங்கப்பட்ட உயர்நீதி மன்ற மதுரை கிளையில் தற்போது 23 நீதிபதிகள் உள்ளனர். வழக்குகளின் நிலுவை கட்டுக்குள் இருந்தாலும் புதிய வழக்குகள் தினமும் அதிகரிக்கின்றன. இது மதுரை கிளை மீதுள்ள நம்பிக்கைக்கான அங்கீகாரம்.
ஒரு வழக்கை பதிவு செய்து நீண்ட காலம் பொறுமையுடன் காத்திருப்பதை விட விரைவாக தீர்வு வழங்குவதையே விரும்பு கின்றனர். இதனால் நாடு முழுவதும் மத்தியஸ்தம், சமரசம், லோக் அதாலத் போன்ற மாற்று வழிகள் மூலம் நிலுவை வழக்குகள் குறைக்கப்பட்டு வரு
கின்றன. வணிக மத்தியஸ்த முறை சமூகத்திற்கு பெரும் பங்காற்றுகின்றன.
சம்பந்தபட்ட துறை சார்ந்த, நிர்வாகம் - தொழிலாளர் இடையிலான உறவை நன்கறிந்த ஒருவர் நீதித்துறை சார்ந்த அதிகாரியுடன் விசாரணை நடத்தும் போது
உற்பத்தி நடவடிக்கைகள் நிர்வாக
சிக்கல்களை சரியாகப் புரிந்து கொள்ள முடியும்.
தூத்துக்குடி துறைமுகம், மதுரை, திருச்சி விமான நிலையங்கள் இருப்பதால் வணிக வழக்குகளே அதிகம் தாக்கலாகும். அவ்வாறு தாக்கலாகும் வழக்குகளை விரைவாக முடிவுக்கு கொண்டுவர மத்தியஸ்த மையங்கள் அவசியம். இங்கு 3 தனித் தனி அரங்குகளில் டச் ஸ்கிரீன் வசதியுடன் கூடிய
வீடியோ இணைப்பு வசதிகள், நூலகம்,வரவேற்பறை போன்ற வசதிகள் உள்ளன. வணிகச் சமூகம், வழக்கறிஞர்கள் சிறந்த முறையில் இதை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்' என்றார்.
உயர்நீதிமன்ற மதுரை கிளை வழக்கறிஞர் சங்கம் அருள்வடிவேல் சேகர், மதுரை வழக்கறிஞர்கள் சங்க தலைவர் சுரேஷ்., செயலாளர் வெங்கடேசன், வர்த்தக சங்க செயலாளர் ஸ்ரீதர், பொருளாளர் சுந்தரலிங்கம், இணைச் செயலாளர்கள் சத்யம் செந்தில், கணேசன், துணைத் தலைவர் செல்வம் மற்றும் அனைத்து அமைப்புகளின் தலைவர் நீதிமோகன் உள்ளிட்ட நிர்வாகிகள், உறுப்பினர்கள், வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர்.