News Logo
முகப்பு தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா தொழில்நுட்பம் வேளாண்மை கல்வி சுற்றுலா ஆன்மிகம் விளையாட்டு
அண்மைச் செய்தி
முக்கிய பிரிவுகள்
முகப்பு அண்மைச் செய்திகள்
தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா தொழில்நுட்பம் வேளாண்மை கல்வி சுற்றுலா ஆன்மிகம் விளையாட்டு
கல்வி

பள்ளி முன்னாள் மாணவர்கள் மீள்கூடல் மற்றும் நூல்கள் வெளியீட்டு விழா

பள்ளி முன்னாள் மாணவர்கள் மீள்கூடல் மற்றும் நூல்கள் வெளியீட்டு விழா
0 கருத்துக்கள்

திருப்பரங்குன்றம் மு.மு. மேல்நிலைப் பள்ளி முன்னாள் மாணவர்கள் மீள்கூடல் மற்றும் நூல்கள் வெளியீட்டு விழா.

​

திருப்பரங்குன்றத்தில் இயங்கி வரும் முத்துத்தேவர் முக்குலத்தோர் மேல்நிலைப் பள்ளியின் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு மற்றும் புத்தக வெளியீட்டு விழா 17 அக்டோபர் 2026 அன்று பசுமலை மூலக்கரையில் உள்ள கோபால்சாமி திருமண மண்டபத்தில் நடைபெற்றது.


​ஏழை எளிய மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காக, இருபாலர் பள்ளியாக nமுத்துத்தேவர் அவர்களால் 'முத்துத்தேவர் முக்குலத்தோர் உயர்நிலைப்பள்ளி' என்ற பெயரில் 1956-ஆம் ஆண்டு இப்பள்ளி தொடங்கப்பட்டு, தற்போது 70 ஆண்டுகளைக் கடந்து வெற்றிகரமாகச் செயல்பட்டு வருகிறது.


​பல ஆண்டுகள் கழித்து ஒன்று கூடிய முன்னாள் மாணவர்கள் தங்களது பழைய நினைவுகளையும், வாழ்வியல் அனுபவங்களையும் தொகுத்து "குன்றத்து பள்ளியின் மலரும் நினைவுகள்" என்ற தலைப்பில் புத்தகமாக வெளியிட்டுள்ளனர்.

​இப்புத்தகத்தின் முதல் பிரதியை பள்ளியின் 94 வயது முதிர்ந்த முன்னாள் ஆசிரியர் திரு. S.R. சிவனாண்டி அவர்கள் வெளியிட, ரிசர்வ் வங்கியின் முன்னாள் இயக்குநரும் இப்பள்ளியின் முன்னாள் மாணவருமான திரு. கருப்பசாமி அவர்கள் பெற்றுக் கொண்டார்.

​1956-ஆம் ஆண்டின் முன்னாள் மாணவர் திரு. மறைமலை இலக்குவனார் அணிந்துரை வழங்கிச் சிறப்பித்துள்ளார்.

 சம்பத், IAS, நெடுஞ்செழியன், IAAS,

அர்ச்சுனன் (பள்ளி மேனாள் ஆசிரியர்),

​ரா. கண்ணன் (பள்ளிச் செயலர்)

 மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை டாக்டர் சம்பத்குமார், முன்னாள் மருத்துவக் கல்வி இயக்குநர் விநாயகம், மத்திய தொல்லியல் துறை மேனாள் இயக்குநர் வேங்கடராமன் உட்பட 86 முன்னாள் மாணவர்களின் சுயகுறிப்பும் வரலாற்றுச் சுருக்கமும் இந்நூலில் தொகுக்கப்பட்டுள்ளன.

​ இந்நூல் அனைத்துப் பள்ளி நூலகங்களுக்கும் மற்றும் பொது நூலகங்களுக்கும் இலவசமாக வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

​1956-ஆம் ஆண்டு பள்ளியில் சேர்ந்த முதல் மாணவரான ப. பிரணவம் அவர்கள் நேரில் கலந்து கொண்டு விழாவ சிறப்பித்தார். 94 வயதிலும் ஆர்வத்துடன் வருகை தந்த திரு. S.R. சிவனாண்டி மற்றும் 77 வயதான முன்னாள் மாணவரும் ஆசிரியருமான திரு. ஜெயக்கொடி ஆகியோரின் வருகை நிகழ்ச்சியில் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

​திருப்பரங்குன்றம் சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த பள்ளி ஆசிரியர்கள், மாணவ-மாணவியர்கள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


​ இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை முன்னாள் மாணவர்கள் சுவாமி நாதன், பொன். மனோகரன், லெனின் சுப்பையா, பாண்டியன், ரவி சம்பத், இராஜராஜன் ஆகியோர் செய்திருந்தனர்.






Kathiravan
Published By

Kathiravan

Editor / Reporter

தமிழ் செய்திகள் மற்றும் நடப்பு நிகழ்வுகள் தொடர்பான செய்திகளை வாசகர்களுக்கு துல்லியமாகவும் தெளிவாகவும் வழங்கும் செய்தியாளர்.

Published:

இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருந்ததா?

உங்கள் விருப்பத்தைத் தந்து எங்களை ஊக்குவியுங்கள்!

கருத்துப்பெட்டி (Comments)

உங்கள் பின்னூட்டத்தை உள்ளிடவும் (Enter Your Comment)

இந்த செய்திக்கு இன்னும் கருத்து வரவில்லை. முதல் ஆளாக நீங்களே பதிவிடுங்கள்!