News Logo
முகப்பு தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா தொழில்நுட்பம் வேளாண்மை கல்வி சுற்றுலா ஆன்மிகம் விளையாட்டு உணவு ஜோதிடம் நலம்
அண்மைச் செய்தி
முக்கிய பிரிவுகள்
முகப்பு அண்மைச் செய்திகள் பிரீமியம் கட்டுரைகள்
தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா தொழில்நுட்பம் வேளாண்மை கல்வி சுற்றுலா ஆன்மிகம் விளையாட்டு உணவு ஜோதிடம் நலம்
Advertisement / விளம்பரம்

உங்கள் வணிகத்தை லட்சக்கணக்கான வாசகர்களிடம் கொண்டு சேர்க்க வேண்டுமா?

இணையதளத்தின் முதன்மைப் பக்கங்களில் மிகக் குறைந்த கட்டணத்தில் விளம்பரம் செய்ய உடனே எங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்.

தமிழ்நாடு

அமைச்சர் ரகுபதிக்கு தமிழிசை பதிலடி

அமைச்சர் ரகுபதிக்கு  தமிழிசை பதிலடி
NEWS TODAY TAMIL
Updated on: 05 Dec 2025, 12:00 am 2 min read
0 கருத்துக்கள்

தமிழையும், இந்து மதத்தையும் ஆன்மீகத்தையும் பிரித்துப் பார்க்க முடியாது என்று அமைச்சர் ரகுபதிக்கு பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் பதிலடி கொடுத்துள்ளார். 

இது தொடர்பாக தமிழக பாஜக முன்னாள் தலைவரும், முன்னாள் ஆளுநருமான தமிழிசை சவுந்தரராஜன் அவரது எக்ஸ் பக்கத்தில் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில்," தமிழக சட்ட அமைச்சர் ரகுபதியின் வார்த்தைகளை நான் வன்மையாக கண்டிக்கிறேன். தமிழ் வேறு இந்து மதம் வேறு.. தமிழர்கள் வேறு இந்துக்கள் வேறு என்ற பொருள்பட வேற்றுமையை விதைத்து கொண்டிருக்கிறார்.

ஆழ்வார்களும், நாயன்மார்களும் வளர்த்தது தான் இந்த தமிழ், அண்ணா வளர்த்தது தமிழ் அல்ல. ஆண்டாள் வளர்த்தது தான் தமிழ். தமிழையும்,  இந்து மதத்தையும் ஆன்மீகத்தையும் பிரித்துப் பார்க்க முடியாது. இப்படி தொடர்ந்து பிரித்து ஆளும் கொள்கையை மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.

உங்கள் முதலமைச்சர் எத்தனை முருகன் கோயில்களுக்கு சென்று இருக்கிறார் என்று சொல்ல முடியுமா? ஏன் முருகன் திருவிழாக்களுக்கு கூட வாழ்த்து சொல்வதில்லை. அரசியல் லாபத்திற்காக முருகனையும் இந்து மதத்தையும் பிரிக்கும் இந்த சூழ்ச்சியை தமிழக மக்கள் ஒரு நாளும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

பாஜக  தமிழகத்தை இந்துத்துவ பரிசோதனை களமாக மாற்றுகிறது என்று ஒரு பொய்யான குற்றச்சாட்டை சொல்கிறார். உண்மை என்ன என்றால் இந்துக்களுக்கு தமிழகத்தை ஒரு சோதனைக்களமாக வேதனைக்களமாக திமுக மாற்றிக் கொண்டிருக்கிறது. 2026-ல் திமுக பெறப்போகும் தோல்விக்கு பின்பு அவர்கள் சந்திக்கும் காலம் வேதனை காலமாக இருக்கும் என்பது உறுதி" என்று தெரிவித்துள்ளார். 

இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருந்ததா?

உங்கள் விருப்பத்தைத் தந்து எங்களை ஊக்குவியுங்கள்!

கருத்துப்பெட்டி (Comments)

உங்கள் பின்னூட்டத்தை உள்ளிடவும் (Enter Your Comment)

இந்த செய்திக்கு இன்னும் கருத்து வரவில்லை. முதல் ஆளாக நீங்களே பதிவிடுங்கள்!

Advertisement / விளம்பரம்

உங்கள் வணிகத்தை லட்சக்கணக்கான வாசகர்களிடம் கொண்டு சேர்க்க வேண்டுமா?

இணையதளத்தின் முதன்மைப் பக்கங்களில் மிகக் குறைந்த கட்டணத்தில் விளம்பரம் செய்ய உடனே எங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்.