கடலூர் மாவட்டம், திட்டக்குடி அருகே கார்கள் மீது அரசு விரைவு பஸ் மோதிய விபத்தில் 9 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்து தொடர்பாக பஸ் டிரைவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடலூர் மாவட்டம், திட்டக்குடி அருகே தேசிய நெடுஞ்சாலையில் கார்கள் மீது அரசு விரைவு பஸ் மோதியது. இதில் கார்கள் நொறுங்கி 9 பேர் உயிரிழந்தனர். மேலும் படுகாயமடைந்த 4 பேர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் அஜாக்கிரதையாக பஸ்சை இயக்கியதாக அதன் டிரைவர் தாஹா அலி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில் அவரை போலீஸார் இன்று கைது செய்தனர்.
அரசு விரைவு போக்குவரத்து கழக டிரைவர் தாஹா அலியை கைது செய்த ராமநத்தம் காவல்துறை, அவர் மீது மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளது. பஸ்சை இயக்குவதற்கு முன்பாக உரிய முறையில் சோதனை செய்யத் தவறியதாக காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.