News Logo
முகப்பு தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா தொழில்நுட்பம் வேளாண்மை கல்வி சுற்றுலா ஆன்மிகம் விளையாட்டு உணவு ஜோதிடம் நலம்
அண்மைச் செய்தி
முக்கிய பிரிவுகள்
முகப்பு அண்மைச் செய்திகள் பிரீமியம் கட்டுரைகள்
தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா தொழில்நுட்பம் வேளாண்மை கல்வி சுற்றுலா ஆன்மிகம் விளையாட்டு உணவு ஜோதிடம் நலம்
Advertisement / விளம்பரம்

உங்கள் வணிகத்தை லட்சக்கணக்கான வாசகர்களிடம் கொண்டு சேர்க்க வேண்டுமா?

இணையதளத்தின் முதன்மைப் பக்கங்களில் மிகக் குறைந்த கட்டணத்தில் விளம்பரம் செய்ய உடனே எங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்.

தமிழ்நாடு

உ.பியில் பலாத்காரம் செய்ய முயன்றவரை குத்திக் கொன்ற இளம்பெண்

உ.பியில் பலாத்காரம் செய்ய முயன்றவரை குத்திக் கொன்ற இளம்பெண்
NEWS TODAY TAMIL
Updated on: 02 Jan 2026, 12:00 am 2 min read
0 கருத்துக்கள்

தன்னை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றவரை 18 வயது இளம்பெண் குத்திக் கொலை செய்த சம்பவம் உத்தரப்பிரதேசத்தில் பெரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

உத்தரப்பிரதேச மாநிலம், பண்டா மாவட்டத்தைச் சேர்ந்த முர்வால் கிராமத்தில்  சுக்ராஜ் பிரஜாபதி(50) என்பவர் ஒரு வீட்டில் இறந்து கிடப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீஸார் அங்கு விரைந்தனர். சுக்ராஜ் பிரஜாபதி உடல், தலை ஆகிய பகுதிகளில் கூர்மையான ஆயுதங்களால் தாக்கிய காயம் இருந்தது. இதனால் சுக்ராஜ் பிரஜாபதி கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது. இது தொடர்பாக போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். 

அப்போது அந்த  வீட்டைச் சேர்ந்த 18 வயது இளம்பெண் மீது போலீஸாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவரிடம் விசாரணை நடைபெற்ற போது, சுக்ராஜ் பிரஜாபதியை அவர் கொலை செய்தது தெரிய வந்தது. இளம்பெண் வீட்டிற்குள் அத்துமீறி  புகுந்து அவரை சுக்ராஜ் பிரஜாபதி  பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார்.

அப்போது தன்னைப் பாதுகாத்துக் கொள்ள அங்கிருந்த கூர்மையான கம்பியால் சுக்ராஜ் பிரஜாபதியை தாக்கியதாகவும், அதில் அவர் உயிரிழந்து விட்டதாக கூறினார். இதையடுத்து இளம்பெண்ணை போலீஸார் கைது செய்தனர். இந்த சம்பவம் பண்டா மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருந்ததா?

உங்கள் விருப்பத்தைத் தந்து எங்களை ஊக்குவியுங்கள்!

கருத்துப்பெட்டி (Comments)

உங்கள் பின்னூட்டத்தை உள்ளிடவும் (Enter Your Comment)

இந்த செய்திக்கு இன்னும் கருத்து வரவில்லை. முதல் ஆளாக நீங்களே பதிவிடுங்கள்!

Advertisement / விளம்பரம்

உங்கள் வணிகத்தை லட்சக்கணக்கான வாசகர்களிடம் கொண்டு சேர்க்க வேண்டுமா?

இணையதளத்தின் முதன்மைப் பக்கங்களில் மிகக் குறைந்த கட்டணத்தில் விளம்பரம் செய்ய உடனே எங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்.