News Logo
முகப்பு தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா தொழில்நுட்பம் வேளாண்மை கல்வி சுற்றுலா ஆன்மிகம்
அண்மைச் செய்தி
முக்கிய பிரிவுகள்
முகப்பு அண்மைச் செய்திகள்
தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா தொழில்நுட்பம் வேளாண்மை கல்வி சுற்றுலா ஆன்மிகம்
தமிழ்நாடு

எந்த செய்தியாக இருந்தாலும் எங்களிடம் விளக்கம் கேட்டு வெளியிட்டால் நல்லது

எந்த செய்தியாக இருந்தாலும் எங்களிடம் விளக்கம் கேட்டு வெளியிட்டால் நல்லது - 1
எந்த செய்தியாக இருந்தாலும் எங்களிடம் விளக்கம் கேட்டு வெளியிட்டால் நல்லது - 2
0 கருத்துக்கள்


 எந்த செய்தியாக இருந்தாலும் எங்களிடம் விளக்கம் கேட்டு வெளியிட்டால் நல்லது


 மதுரை செய்தியாளர்கள் சங்க கூட்டத்தில் எம்எல்ஏ கார்த்திகேயன் வேண்டுகோள்


 மதுரை செய்தியாளர்கள் சங்க 32 வது பொதுக்குழு கூட்டம் மாட்டுத்தாவணி செய்தியாளர் அரங்கத்தில் நடைபெற்றது.

 பொதுக்குழு கூட்டத்திற்கு பின் மதுரை மாவட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட 10 தொகுதி எம்எல்ஏக்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.

 மதுரை செய்தியாளர் சங்கத் தலைவர் எஸ். கதிரவன் தலைமை தாங்கினார். செயலாளர் எஸ்.ரமேஷ் பாண்டியன், பொருளாளர் கே.சுப்பிரமணியன் முன்னிலை வகித்தனர்.

 மதுரை கிழக்குத் தொகுதி எம்எல்ஏ கார்த்திகேயன், வடக்கு தொகுதி எம்எல்ஏ கல்லானை, மதுரை மத்திய தொகுதி எம்எல்ஏ முஸ்தபா, தெற்கு தொகுதி எம்எல்ஏ கோபிசன் ஆகியோர் விழாவில் கலந்து கொண்டனர். 

 விழாவில் எம்எல்ஏக்களுக்கு நினைவுக் கேடயம் வழங்கி கவுரவிக்கப்பட்டனர்.

 எம் எல் ஏ கார்த்திகேயன் பேசுகையில், 

 பத்திரிக்கர்களுக்கு நான் என்றுமே அன்பு சகோதரன், நேர்மையான சகோதரனாக இருப்பேன். செய்தியாளர்கள் எந்த தகவலாக இருந்தாலும் தயக்கம் காட்டாமல் நேர்மையாக எழுத வேண்டும்.

 எம்எல்ஏக்களாகவும், மந்திரியாகவும் இருக்கும் நாங்கள் உணர்வு பூர்வமாக சில விஷயங்களை எடுத்துச் செல்வோம். அதில் நல்லதாக இருந்தாலும் தவறுதலாக இருந்தாலும் எங்களிடம் ஒருமுறை விளக்கம் கேட்டு விட்டு நீங்கள் எழுதினால் நன்றாக இருக்கும். 

 ரியல் எஸ்டேட் நிறுவனம் நடத்துபவர்கள் ரோடுகளை மாநகராட்சிக்கு தானம் செய்கிறார்கள். அவ்வாறு தானம் செய்யப்பட்ட ரோட்டை அடைத்து பின்பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு வழி விட மறுக்கிறார்கள். இதுகுறித்து எனது தொகுதியில் உள்ள ஊராட்சி மன்ற தலைவர் தலைமையில் பொதுமக்கள் புகார் கொடுத்தனர். இது குறித்து பொதுமக்கள் முன்னிலையில் அதிகாரியிடம் விளக்கம் கேட்டேன். 

தானம் செய்யப்பட்ட ரோடுகளை அடைப்பது தவறு. இது போன்ற புரட்சிக்குரிய பொதுமக்கள் பாதிக்கப்படக்கூடிய விஷயங்களை என்னிடமும் கேட்டு செயல்படவும் என்று கூறியிருந்தேன். 

  ஆனால் வரைபட அனுமதி என்னிடம் கேட்டு விட்டு தான் அனுமதி கொடுக்க வேண்டும் என்று நான் கூறியது போல திரித்தி எழுதப்பட்டு விட்டது. 

 நான் பேசியதை அங்கே பொது மக்களிடம் அல்லது என்னிடமோ கேட்டிருக்கலாம். ஒருதலை பட்சமாக எழுதப்பட்டு விட்டது. 

 நான் எனக்காக மட்டும் இல்லை ஒட்டுமொத்த எம்எல்ஏக்களுக்காகவும் உங்களிடம் இதை வேண்டுகோளாக வைக்கிறேன் என்று பேசினார்.


 முஸ்தபா எம்எல்ஏ பேசுகையில், பத்திரிகைகள் என்ற குடும்பத்தில் நானும் ஒருவன். உங்கள் கோரிக்கை எதுவாக இருந்தாலும் அது முதல்வர் மூலம் நிச்சயமாக நிறைவேற்றப்படும். அதற்கு உறுதுணையாக இருப்பேன் என்று பேசினார்.


 வடக்கு தொகுதி எம்எல்ஏ கல்லானை பேசுகையில், பத்திரிகையாளர்களுக்கான அரசு நலத்திட்டங்கள் அனைத்தும் உங்களுக்கு கிடைப்பதற்கு நாங்கள் உறுதுணையாக இருப்போம். உங்கள் கோரிக்கை அனைத்தும் சட்டப்படி அதிகாரிகளிடம் கூறி நிறைவேற்றி தரப்படும் என்று உறுதி அளித்தார்.


 எம் எல் ஏ கோபிசன் பேசுகையில், சென்னை மட்டுமல்ல மதுரை மையமாக கொண்ட தென் மாவட்டங்களை

 செய்தியாளர்களின் கோரிக்கை அரசுக்கு உறுதியாக எடுத்து செல்வேன். அதை நிறைவேற்றவும் குரல் கொடுப்பேன் என்று பேசினார்.

 பொதுக்குழு கூட்டத்தில் அனைத்து பத்திரிகையைச் சேர்ந்த உறுப்பினர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். தமிழக அரசின் பத்திரிகையாளர்கள் நல வாரிய குழு உறுப்பினர் பதவிகளில் மதுரை செய்தியாளர் சங்கத்தைச் சேர்ந்தவர்களும் அங்கம் வகிக்க அரசு அனுமதிக்க வேண்டும்.

 பத்தியாளர்களுக்கான அரசு கமிட்டிகளிலும் மதுரை சங்கத்தை சேர்ந்தவர்களுக்கும் வாய்ப்பு வழங்க வேண்டும் உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.



Kathiravan
Published By

Kathiravan

Editor / Reporter

தமிழ் செய்திகள் மற்றும் நடப்பு நிகழ்வுகள் தொடர்பான செய்திகளை வாசகர்களுக்கு துல்லியமாகவும் தெளிவாகவும் வழங்கும் செய்தியாளர்.

Published:

இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருந்ததா?

உங்கள் விருப்பத்தைத் தந்து எங்களை ஊக்குவியுங்கள்!

கருத்துப்பெட்டி (Comments)

உங்கள் பின்னூட்டத்தை உள்ளிடவும் (Enter Your Comment)

இந்த செய்திக்கு இன்னும் கருத்து வரவில்லை. முதல் ஆளாக நீங்களே பதிவிடுங்கள்!