News Logo
முகப்பு தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா தொழில்நுட்பம் வேளாண்மை கல்வி சுற்றுலா ஆன்மிகம் விளையாட்டு நலம்
அண்மைச் செய்தி
முக்கிய பிரிவுகள்
முகப்பு அண்மைச் செய்திகள்
தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா தொழில்நுட்பம் வேளாண்மை கல்வி சுற்றுலா ஆன்மிகம் விளையாட்டு நலம்
இந்தியா

தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றப்பற்றது.

தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றப்பற்றது.
0 கருத்துக்கள்

 தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றப்பற்றது.

 அரோகரா கோஷமிட்டு பக்தர்கள் கொண்டாட்டம்


 உன் நீதிமன்ற நீதிபதிகளின் உத்தரவை நிறைவேற்றும் வகையில் திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் 5 மணிக்கு தீபம் ஏற்றப்பட்டது. 

 பெற்ற நீதிபதிகள் வைத்தியநாதன் மற்றும் பார்த்திபன் ஆகியோர் மூன்று மணிக்கே தீபச்சட்டி, நெய் சகிதம் பழனி ஆண்டவர் வழியாக மலை உச்சிக்கு படி ஏறி சென்றனர்.

 அவரோடு மதுரை கலெக்டர் நிஷாந்த் கிருஷ்ணாவும் சென்றார். தீபம் ஏற்றுவதற்கு 50 பேர் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். மற்றவர்கள் யாரும் அனுமதிக்கவில்லை. இதனால் மக்கிச் செல்லும் வழியில் போலீசார் உடன் பொதுமக்களும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பாதுகாப்பு கருதி பொதுமக்களை அனுமதிக்கவில்லை என்றும் நாளை முதல் எல்லோரும் செல்லலாம் என்றும் போலீசார் தெரிவித்தனர்.

 தீபத் தூணில் தீபம் ஏற்றுவதைக் காண வெளி ஊர்களில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான மக்கள் திருப்பரங்குன்றத்தில் குவிந்தனர். 

தீபம் ஏற்றுவதற்கு ஸ்தானிக பட்டார்களான வசந்த் பட்டர், விவேக் பட்டர், அஜித் பட்டர், ஸ்ரீதர் பட்டர் ஆகியோர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

 திருப்பரங்கு கோயில் இணை ஆணையர் உட்பட இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. நீண்ட நேர பேச்சுவார்த்தைக்கு பின்னர் அவர்கள் அனுமதிக்கப்பட்டனர். 

 மலை உச்சியில் தீபம் காண 50 பேர் மட்டும் அனுமதிக்கப்பட்ட நிலையில் இந்து அமைப்பைச் சேர்ந்த அனைவரும் கோயில் முன்புறமுள்ள 16 கால் மண்டபம் அருகே தீபம் காண அமர வைக்கப்பட்டனர்.

திருப்பரங்குன்றம் மலையை சுற்றியுள்ள உயரமான கட்டிடங்களில் ஏறி பொது மக்கள் தீபம் காண ஆர்வத்துடன் காத்திருந்தனர்.

 மாலை சரியாக 5 மணிக்கு நீதிபதிகள் இருவர் முன்னிலையில் அஜித் பட்டர் மேடை மேல் ஏறி சிறப்பு ஆராதனைகள் செய்து தீபம் ஏற்றினார். பக்தர்கள் மலர் தூவி அரோஹரா கோஷம் எழுப்பி வணங்கினர். 



 




Kathiravan
Published By

Kathiravan

Editor / Reporter

தமிழ் செய்திகள் மற்றும் நடப்பு நிகழ்வுகள் தொடர்பான செய்திகளை வாசகர்களுக்கு துல்லியமாகவும் தெளிவாகவும் வழங்கும் செய்தியாளர்.

Published:

இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருந்ததா?

உங்கள் விருப்பத்தைத் தந்து எங்களை ஊக்குவியுங்கள்!

கருத்துப்பெட்டி (Comments)

உங்கள் பின்னூட்டத்தை உள்ளிடவும் (Enter Your Comment)

இந்த செய்திக்கு இன்னும் கருத்து வரவில்லை. முதல் ஆளாக நீங்களே பதிவிடுங்கள்!