News Logo
முகப்பு தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா தொழில்நுட்பம் வேளாண்மை கல்வி சுற்றுலா ஆன்மிகம்
அண்மைச் செய்தி
முக்கிய பிரிவுகள்
முகப்பு அண்மைச் செய்திகள்
தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா தொழில்நுட்பம் வேளாண்மை கல்வி சுற்றுலா ஆன்மிகம்
தமிழ்நாடு

அண்ணாவின் 57-வது நினைவு தினம்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை

அண்ணாவின் 57-வது நினைவு தினம்-  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை
0 கருத்துக்கள்

தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் அண்ணாவின் 57-வது நினைவு நாளை முன்னிட்டு சென்னையில் உள்ள அவரது நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.

பேரறிஞர் அண்ணாவின் 57-வது நினைவுநாளை முன்னிட்டு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னையில் இன்று (பிப்ரவரி 3) அமைதிப்பேரணி நடைபெற்றது. சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் உள்ள அண்ணா சிலையில் இருந்து அண்ணா சதுக்கம் வரை பேரணி நடைபெற்றது. ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமைதிப் பேரணியை தொடங்கினார். 

இந்த பேரணியில் அமைச்சர்கள் கே.என்.நேரு, சேகர்பாபு, நாடாளுமன்ற உறுப்பினர்கள்  தயாநிதி மாறன், ஆ.ராசா ஆகியோர்  பங்கேற்றனர். அங்கிருந்து அமைதிப் பேரணியாக சென்று மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். அவரைத் தொடர்ந்து அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, மா.சுப்பிரமணியன் உள்பட பலர்  மலர்தூவி மரியாதை செலுத்தினர். அண்ணா நினைவிடத்தில் மரியாதை செலுத்திய பின்பு கலைஞர் நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.
 

Kathiravan
Published By

Kathiravan

Editor / Reporter

தமிழ் செய்திகள் மற்றும் நடப்பு நிகழ்வுகள் தொடர்பான செய்திகளை வாசகர்களுக்கு துல்லியமாகவும் தெளிவாகவும் வழங்கும் செய்தியாளர்.

Published:

இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருந்ததா?

உங்கள் விருப்பத்தைத் தந்து எங்களை ஊக்குவியுங்கள்!

கருத்துப்பெட்டி (Comments)

உங்கள் பின்னூட்டத்தை உள்ளிடவும் (Enter Your Comment)

இந்த செய்திக்கு இன்னும் கருத்து வரவில்லை. முதல் ஆளாக நீங்களே பதிவிடுங்கள்!