திருப்பரங்குன்றம் கோயிலில் பஞ்சாமிர்தம் விற்பனை செய்யாமல் பக்தர்களை ஏமாற்றும் திருக்கோயில் நிர்வாகம் அமைச்சரின் உத்தரவின் பேரில் உடனடியாக விற்பனை செய்ய இந்துமக்கள்கட்சி கோரிக்கை
G
இந்து மக்கள் கட்சி மதுரை மாவட்ட தலைவர் சோலை கண்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
தமிழகத்தில் இந்துசமய அறநிலையத்துறை கட்டுபாட்டில் இயங்கக்கூடிய திருக்கோயில்களில் பிரசாதத்திற்காக விற்பனை செய்ய தனியார் நிறுவனங்களுக்கு அளித்த டெண்டர்கள் அனைத்தும் ரத்து செய்து திருக்கோயில்கள் நிர்வாகம் சார்பில் பிரசாதங்கள் பக்தர்களுக்கு விற்பனை செய்யப்படுமென்று கடந்த ஜுன் மாதத்தில் இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் உத்தரவிட்டுருந்தார்.
ஆனால் அந்த உத்தரவு காற்றில் பறக்கவிடும் வகையில்
தமிழ்கடவுள் முருகப்பெருமானின் முதற்படை வீடான திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் புளியோதரை,பொங்கல்,முறுக்கு போன்ற பிரசாதங்களை தான் திருக்கோயில் நிர்வாகம் தயாரித்து பக்தர்களுக்கு விற்பனை செய்து வருகிறார்களே தவிர முருகப்பெருமானுக்கு உகந்த பிரசாதமான பஞ்சாமிர்தத்தை மட்டும் தயாரிக்கவில்லை.
அழகர் கோயிலில் தயாரிக்கும் பஞ்சாமிர்தத்தை கொண்டு வந்து இங்கு விற்பனை செய்து வருகிறது கோயில் நிர்வாகம்,.அதுவும் கடந்த ஒரு மாத காலமாக நிறுத்தி வைக்கப்பட்டது.
திருப்பரங்குன்றம் கோயிலுக்கு வரும் பக்தர்கள் பஞ்சாமிர்தம் கிடைக்காமல் ஏமாற்றம் அடைகின்றனர்.
அமைச்சரின் உத்தரவை மதிக்காமல் செயல்படும் திருப்பரங்குன்றம் கோயில் நிர்வாகத்தை இந்துமக்கள்கட்சி வன்மையாக கண்டிக்கிறது.
பஞ்சாமிர்தம் தினந்தோறும் கிடைக்கும் வகையில் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென திருக்கோயில் நிர்வாகத்தையும், இந்துசய அறநிலையத்துறையையும் இந்துமக்கள்கட்சி வலியுறுத்திகிறது.