தமிழக வெற்றிக் கழகம் சார்பில் U-15 கால்பந்து போட்டி
இளம் வீரர்களின் திறமையை வெளிக்கொண்டு வர
விளையாட்டு வழியாக இளைஞர் வளர்ச்சி மற்றும் வளமான தமிழகத்தை உருவாக்கும் நோக்கில், தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் 'U-15 கால்பந்து போட்டி – 2026' நடத்தப்படுகிறது. மத்திய தொகுதி எம்எல்ஏ முஸ்தபா ஏற்பாட்டின் பேரில் 2012 மற்றும் 2013-ம் ஆண்டுகளில் பிறந்த வீரர்களுக்காக நடத்தப்படும் சிறப்பு கால்பந்து போட்டியாகும்.
இளம் கால்பந்து வீரர்களின் திறமையை வெளிக்கொண்டு வரவும், அவர்களை ஊக்குவிக்கும் வகையிலும் இந்தப் போட்டி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த விளையாட்டு போட்டிக்கு
மதுரை மத்திய சட்டமன்ற உறுப்பினர், மதுரை மத்திய மாவட்ட கழகச் செயலாளர், கழக செய்தி தொடர்பாளர் மதார் பத்ருதீன் (எ) V.M.S. முஸ்தபா
தலைமை தாங்குகிறார்.
மதுரை மேற்கு சட்டமன்ற உறுப்பினர், மதுரை மாநகர் தெற்கு மாவட்டக் கழகச் செயலாளர் S.R. தங்கபாண்டி,
மதுரை வடக்கு சட்டமன்ற உறுப்பினர், மதுரை மாநகர் வடக்கு மாவட்டக் கழகச் செயலாளர் விஜய் அன்பன் A. கல்லணை,
மதுரை கிழக்கு சட்டமன்ற உறுப்பினர், மதுரை கிழக்கு மாவட்டக் கழகச் செயலாளர் சோ. கார்த்திகேயன்
மதுரை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் M.M. கோபிசன் ஆகியோர் முன்னிலையில் போட்டி நடைபெறுகிறது.
மதுரை இனி ஜெயபால் விளையாட்டு அரங்கத்தில் சனிக்கிழமை காலை முதல் போட்டி தொடங்குகிறது. இந்தப் போட்டி 15 வயதுக்குட்பட்ட இளம் கால்பந்து வீரர்கள் அனைவரும் கலந்து கொள்ளலாம் என முஸ்தபா எம்எல்ஏ தெரிவித்துள்ளார்.