சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை வனவிலங்கு (பாதுகாப்பு) சட்டம், 1972 இன் பிரிவு 6 (1)-ன் கீழ் மாநில வனவிலங்கு வாரியம் மறுசீரமைக்கப்பட்டு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன்
தலைவராக முதலமைச்சர் விஜய், .துணைத் தலைவராக வனத்துறை அமைச்சர் ரஞ்சித் குமார், உறுப்பினர்களாக
மாநில சட்டமன்றத்திலிருந்து மூன்று உறுப்பினர்கள் மட்டும் நியமிக்கப்பட்டுள்ளனர். மதுரை கிழக்குச் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் கார்த்திகேயன், காட்பாடி டாக்டர் எம். சுதாகர், பல்லவி ஆகியோர் வாரிய உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார்.
மேலும்
தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக நிர்வாக இயக்குநர்,
தலைமை வனப்பாதுகாவலர்,
விலங்கு பராமரிப்புத்துறை இயக்குநர்,
மீன்வளத்துறை இயக்குநர் உட்பட பல அதிகாரிகளும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
பாதுகாக்கப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட வேண்டிய பகுதிகளைத் தேர்ந்தெடுத்தல் மற்றும் மேலாண்மை செய்தல்.
வனவிலங்குகள் மற்றும் குறிப்பிட்ட தாவரங்களைப் பாதுகாத்தல் மற்றும் பராமரிப்பதற்கான கொள்கைகளை உருவாக்குதல்.
எந்தவொரு அட்டவணையையும் (Schedule) திருத்துவது தொடர்பான விஷயங்கள்.
வனவிலங்குகள் பாதுகாப்புடன் காடுகளில் உள்ள பழங்குடியினர் மற்றும் பிற குடியிருப்பாளர்களின் தேவைகளை ஒருங்கிணைப்பதற்கான நடவடிக்கைகள்.
மாநில அரசால் குறிப்பிடப்படும் வனவிலங்கு பாதுகாப்புடன் தொடர்புடைய பிற விஷயங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டு முடிவு எடுக்கும் பணிகளை இவர்கள் மேற்கொள்வார்கள்.