News Logo
முகப்பு தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா தொழில்நுட்பம் வேளாண்மை கல்வி சுற்றுலா ஆன்மிகம் விளையாட்டு நலம்
அண்மைச் செய்தி
முக்கிய பிரிவுகள்
முகப்பு அண்மைச் செய்திகள்
தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா தொழில்நுட்பம் வேளாண்மை கல்வி சுற்றுலா ஆன்மிகம் விளையாட்டு நலம்
தமிழ்நாடு

தமிழகத்தில் கொலைக்கும் மது விற்பனைக்கும்தான் போட்டி

தமிழகத்தில் கொலைக்கும் மது விற்பனைக்கும்தான் போட்டி
0 கருத்துக்கள்


​ தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: 17 கொலைகள் மற்றும் ரூ. 441 கோடி மது விற்பனைக்கு முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கடும் கண்டனம்


​தீபாவளிப் பண்டிகையின் போது தமிழகத்தில் இரு நாட்களில் 2 சிறுவர்கள், 2 பெண்கள், ஐடி ஊழியர், 3 ரவுடிகள் மற்றும் தேனி எஸ்எஸ்ஐ உள்பட மொத்தம் 17 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

​ தீபாவளி நாளான நவம்பர் 7 மற்றும் 8 ஆகிய இரு தினங்களில் மட்டும் டாஸ்மாக்கில் ரூ. 441 கோடிக்கு மது விற்பனை நடைபெற்றுள்ளது.

​காவல்துறைக்கு பாதுகாப்பு இல்லை: கஞ்சா மற்றும் மது போதைக் கும்பல்களால் காவல்துறை அதிகாரிகள் மீதான தாக்குதல்கள் அதிகரித்து வருவதுடன், காவல்துறைக்கே பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுகிறது. தற்போது தமிழகத்தில் கொலைக்கும் மது விற்பனைக்கும்தான் போட்டி நடைபெறுகிறது. நாம் வாழ்வது தமிழ்நாடா அல்லது கொலை நாடா என்ற சந்தேகம் எழுகிறது. 

"தீபாவளிக்கு கொலை நடப்பது சாதாரணமானது" எனச் செய்தித்துறை அமைச்சர் ராஜ்மோகன் பொறுப்பாற்ற முறையில்  கூறிய கருத்தை கண்டனத்திற்குரியது.

​போதைப் பொருள் புழக்கத்தை அரசு உடனடியாகத் தடுத்து விநியோக சங்கிலியை உடைத்தெறிய வேண்டும்.

​பணியின் போது உயிரிழந்த சிறப்பு உதவி ஆய்வாளர் குடும்பத்திற்கு, கடந்த கால எடப்பாடி பழனிசாமி ஆட்சியைப் போல ரூ. 1 கோடி நிவாரண நிதியும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்க வேண்டும்.

 இவ்வாறு முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் கூறியுள்ளார்.

Kathiravan
Published By

Kathiravan

Editor / Reporter

தமிழ் செய்திகள் மற்றும் நடப்பு நிகழ்வுகள் தொடர்பான செய்திகளை வாசகர்களுக்கு துல்லியமாகவும் தெளிவாகவும் வழங்கும் செய்தியாளர்.

Published:

இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருந்ததா?

உங்கள் விருப்பத்தைத் தந்து எங்களை ஊக்குவியுங்கள்!

கருத்துப்பெட்டி (Comments)

உங்கள் பின்னூட்டத்தை உள்ளிடவும் (Enter Your Comment)

இந்த செய்திக்கு இன்னும் கருத்து வரவில்லை. முதல் ஆளாக நீங்களே பதிவிடுங்கள்!