மிகச்சிறிய வகை அணு உலைகளை அமைப்பது குறித்து இந்தியா -ரஷ்யாவுக்கு இடையே பேச்சு நடைபெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவின் அணுசக்தி துறையின் தலைவர் அஜித்குமார் மொஹந்தி, ரஷ்யாவின் எரிசக்தி நிறுவனமான ராஸ்ஆட்டம் இயக்குநர் அலெக்சி லிகாச்சேவ் ஆகியோருக்கு இடையே சந்திப்பு நடைபெற்றது. இந்தியாவில் ஏற்கெனவே அதிக அளவில் அணு மின் நிலையங்கள் இயங்கி வருகின்றன. இந்த நிலையில், ஸ்மால் மாடுலர் ரியாக்டர் என்ற சிறிய வகை அணு உலைகளை அமைக்க இந்திய அரசு முடிவு செய்துள்ளது.
இதற்கான முயற்சிகளை இந்திய அரசு எடுத்து வருகிறது. இந்த நிலையில், இந்தியாவிற்கு 'ஷெல்ப் எம்' என்ற மிகச் சிறிய அணு உலைகளை வழங்க ரஷ்யா முன் வந்துள்ளது. ரஷ்யாவின் எரிசக்தி நிறுவனமான ராஸ்ஆட்டம் இவற்றை வழங்க உள்ளது. இது தொடர்பாக அஜித்குமார் மொஹந்தி, அலெக்சி லிகாச்சேவ் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.