News Logo
முகப்பு தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா தொழில்நுட்பம் வேளாண்மை கல்வி சுற்றுலா ஆன்மிகம்
அண்மைச் செய்தி
முக்கிய பிரிவுகள்
முகப்பு அண்மைச் செய்திகள்
தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா தொழில்நுட்பம் வேளாண்மை கல்வி சுற்றுலா ஆன்மிகம்
தமிழ்நாடு

பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் உள்பட 113 பேர் மீது வழக்கு

பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் உள்பட 113 பேர் மீது வழக்கு
0 கருத்துக்கள்

திருப்பரங்குன்றத்தில் கார்த்திகை தீபம் ஏற்ற வலியுறுத்தி போராட்டம் நடத்திய தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் உள்பட 113 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.  

மதுரை திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற மதுரை உயர்நீதிமன்ற கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவிட்டிருந்தார். ஆனால், இந்த உத்தரவை தமிழக அரசு நிறைவேற்றவில்லை. இதனால் இரண்டாவது நாளாக திருப்பரங்குன்றத்தில் நேற்றும் பாஜக உள்பட பல்வேறு இந்து அமைப்பினர் போராட்டம் நடத்தினர். 

பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா உள்பட நிர்வாகிகள் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக  நயினார் நாகேந்திரன், ஹெச்.ராஜா உள்பட ஏராளமானோரை போலீஸார் கைது செய்தனர். 

இந்த நிலையில்,  பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட 113 பேர் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அவர்கள் மீது சட்டவிரோதமாக கூடுதல், பொது அமைதிக்கு பங்கம் விளைவித்தல் உள்ளிட்ட 7 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Kathiravan
Published By

Kathiravan

Editor / Reporter

தமிழ் செய்திகள் மற்றும் நடப்பு நிகழ்வுகள் தொடர்பான செய்திகளை வாசகர்களுக்கு துல்லியமாகவும் தெளிவாகவும் வழங்கும் செய்தியாளர்.

Published:

இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருந்ததா?

உங்கள் விருப்பத்தைத் தந்து எங்களை ஊக்குவியுங்கள்!

கருத்துப்பெட்டி (Comments)

உங்கள் பின்னூட்டத்தை உள்ளிடவும் (Enter Your Comment)

இந்த செய்திக்கு இன்னும் கருத்து வரவில்லை. முதல் ஆளாக நீங்களே பதிவிடுங்கள்!