News Logo
முகப்பு தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா தொழில்நுட்பம் வேளாண்மை கல்வி சுற்றுலா ஆன்மிகம் விளையாட்டு உணவு ஜோதிடம் நலம்
அண்மைச் செய்தி
முக்கிய பிரிவுகள்
முகப்பு அண்மைச் செய்திகள் பிரீமியம் கட்டுரைகள்
தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா தொழில்நுட்பம் வேளாண்மை கல்வி சுற்றுலா ஆன்மிகம் விளையாட்டு உணவு ஜோதிடம் நலம்
Advertisement / விளம்பரம்

உங்கள் வணிகத்தை லட்சக்கணக்கான வாசகர்களிடம் கொண்டு சேர்க்க வேண்டுமா?

இணையதளத்தின் முதன்மைப் பக்கங்களில் மிகக் குறைந்த கட்டணத்தில் விளம்பரம் செய்ய உடனே எங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்.

தமிழ்நாடு

முன்னாள் மத்திய அமைச்சர் சுரேஷ் கல்மாடி மரணம்

முன்னாள் மத்திய அமைச்சர் சுரேஷ் கல்மாடி மரணம்
NEWS TODAY TAMIL
Updated on: 06 Jan 2026, 12:00 am 2 min read
0 கருத்துக்கள்

ரயில்வே துறையின் முன்னாள் மத்திய இணை அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான சுரேஷ் கல்மாடி,  இன்று காலமானார். அவருக்கு வயது 81. 

மகாராஷ்டிரா மாநிலம் புணேயில் 1944 மே 1-ம் தேதி பிறந்த சுரேஷ் கல்மாடி காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவராக பணியாற்றியவர்.  புணே மக்களவைத் தொகுதி எம்.பியாக வெற்றி பெற்றவர். ரயில்வே துறையின் மத்திய இணை அமைச்சராகவும்,  இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் முன்னாள் தலைவராகவும் திறம்பட செயல்பட்டவர். 

இவர் உடல் நலன்  பாதிக்கப்பட்டு புணேயில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி சுரேஷ் கல்மாடி இன்று (ஜனவரி 6) காலமானார்.  இவரது மறைவுக்கு காங்கிரஸ் கட்சி உள்பட பல்வேறு கட்சியினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

காலமான சுரேஷ் கல்மாடிக்கு மனைவி, மகன், மருமகள், இரண்டு மகள்கள், பேரன்கள்  உள்ளனர். விளையாட்டு துறை நிதியை முறைகேடாக பயன்படுத்தியதாக ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் சுரேஷ் கல்மாடி கடந்த 2011-ம் ஆண்டு கைது செய்யப்பட்டவர். அவரது இறுதி நிகழ்ச்சி இன்று நடைபெறுகிறது. 

இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருந்ததா?

உங்கள் விருப்பத்தைத் தந்து எங்களை ஊக்குவியுங்கள்!

கருத்துப்பெட்டி (Comments)

உங்கள் பின்னூட்டத்தை உள்ளிடவும் (Enter Your Comment)

இந்த செய்திக்கு இன்னும் கருத்து வரவில்லை. முதல் ஆளாக நீங்களே பதிவிடுங்கள்!

Advertisement / விளம்பரம்

உங்கள் வணிகத்தை லட்சக்கணக்கான வாசகர்களிடம் கொண்டு சேர்க்க வேண்டுமா?

இணையதளத்தின் முதன்மைப் பக்கங்களில் மிகக் குறைந்த கட்டணத்தில் விளம்பரம் செய்ய உடனே எங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்.