News Logo
முகப்பு தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா தொழில்நுட்பம் வேளாண்மை கல்வி சுற்றுலா ஆன்மிகம்
அண்மைச் செய்தி
முக்கிய பிரிவுகள்
முகப்பு அண்மைச் செய்திகள்
தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா தொழில்நுட்பம் வேளாண்மை கல்வி சுற்றுலா ஆன்மிகம்
தமிழ்நாடு

கரூர் துயரம்... சிபிஐ விசாரணையை எதிர்த்து தமிழக அரசு மனு

கரூர் துயரம்... சிபிஐ விசாரணையை எதிர்த்து தமிழக அரசு மனு
0 கருத்துக்கள்

கரூர் துயர சம்பவம் தொடர்பாக நடைபெறும்  சிபிஐ விசாரணையை ரத்து செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மனுத்தாக்கல் செய்துள்ளது. 

கரூர் மாவட்டம், வேலுச்சாமிபுரத்தில் தவெக  தலைவர் விஜய் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்த வழக்கை விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒருநபர் ஆணையத்தை தமிழ்நாடு அரசு நியமித்தது.

பின்னர், சென்னை உயர்நீதிமன்றம் சிறப்புக்குழு அமைத்து உத்தரவிட்டது. இந்த நிலையில்,  சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று  உச்சநீதிமன்றத்தில் தவெக மனு செய்தது. அதற்கு உச்சநீதிமன்றம் அனுமதி அளித்து உத்தரவிட்டது.

கரூர் கூட்ட நெரிசல் வழக்கு தொடர்பாக  சிபிஐ அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சூழலில், சிபிஐ விசாரணையை ரத்து செய்ய வேண்டும் என  தமிழ்நாடு அரசு, உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளது.

அந்த மனுவில்,  கரூர் கொடுந்துயரம் தொடர்பாக, சென்னை உயர்நீதிமன்றம் அமைத்த சிறப்பு புலனாய்வுக் குழுவின் விசாரணையை மீண்டும் தொடர அனுமதிக்க வேண்டும். அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒரு நபர் ஆணையத்தின் விசாரணையை மீண்டும் நடத்தும் வகையில் உத்தரவிட வேண்டும். இந்த வழக்கில் சிபிஐ விசாரணையை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.  

Kathiravan
Published By

Kathiravan

Editor / Reporter

தமிழ் செய்திகள் மற்றும் நடப்பு நிகழ்வுகள் தொடர்பான செய்திகளை வாசகர்களுக்கு துல்லியமாகவும் தெளிவாகவும் வழங்கும் செய்தியாளர்.

Published:

இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருந்ததா?

உங்கள் விருப்பத்தைத் தந்து எங்களை ஊக்குவியுங்கள்!

கருத்துப்பெட்டி (Comments)

உங்கள் பின்னூட்டத்தை உள்ளிடவும் (Enter Your Comment)

இந்த செய்திக்கு இன்னும் கருத்து வரவில்லை. முதல் ஆளாக நீங்களே பதிவிடுங்கள்!