News Logo
முகப்பு தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா தொழில்நுட்பம் வேளாண்மை கல்வி சுற்றுலா ஆன்மிகம்
அண்மைச் செய்தி
முக்கிய பிரிவுகள்
முகப்பு அண்மைச் செய்திகள்
தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா தொழில்நுட்பம் வேளாண்மை கல்வி சுற்றுலா ஆன்மிகம்
தமிழ்நாடு

முதல்வர் தொகுதியில் 10,000 இறந்தவர்களின் ஓட்டுகள்- நயினார் நாகேந்திரன் பேட்டி

முதல்வர் தொகுதியில் 10,000  இறந்தவர்களின் ஓட்டுகள்- நயினார் நாகேந்திரன் பேட்டி
0 கருத்துக்கள்

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் கொளத்தூர் தொகுதியில் 10 ஆயிரம் இறந்தவர்களின் வாக்குகள் உள்ளது. அதனை நீக்குவதற்கு திமுகவினர் எதிர்ப்பு தெரிவிப்பதாக நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார். 

பாஜக தமிழக தலைவர் நயினார் நாகேந்திரன் தென்காசியில் செய்தியாளர்களை இன்று சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், " 2026-ம் ஆண்டு  நடைபெறும் சட்டமன்றத் தேர்தலில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மக்களின் ஆதரவுடன் சிறந்த ஆட்சி அமையும். எஸ்ஐஆர்ஐ  வைத்து திமுகவினர் மக்களை குழப்பி, அவர்கள் தமது வேலைகளை பார்த்து வருகின்றனர். பிஹாரில் 65 லட்சம் வாக்குகள் நீக்கப்பட்டது போல், தமிழகத்தில் சுமார் 75 லட்சம் வாக்குகள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்படும் என தெரிய வருகிறது.

இதில் 2002-ம் ஆண்டுக்குப பின்னர் இறந்தவர்களின் வாக்குகளே இருக்கும். உதாரணமாக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நின்று வெற்றி பெற்ற கொளத்தூர் தொகுதியில் மட்டும் 10 ஆயிரம் வாக்குகள் இறந்தவர்களின் பெயரில் உள்ளன. அவற்றை நீக்குவதற்கு அவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்" என்றார். 

Kathiravan
Published By

Kathiravan

Editor / Reporter

தமிழ் செய்திகள் மற்றும் நடப்பு நிகழ்வுகள் தொடர்பான செய்திகளை வாசகர்களுக்கு துல்லியமாகவும் தெளிவாகவும் வழங்கும் செய்தியாளர்.

Published:

இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருந்ததா?

உங்கள் விருப்பத்தைத் தந்து எங்களை ஊக்குவியுங்கள்!

கருத்துப்பெட்டி (Comments)

உங்கள் பின்னூட்டத்தை உள்ளிடவும் (Enter Your Comment)

இந்த செய்திக்கு இன்னும் கருத்து வரவில்லை. முதல் ஆளாக நீங்களே பதிவிடுங்கள்!