சென்னை: தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் 300 அரசுப் பேருந்துகளின் சேவையை கொடியசைத்துத் தொடங்கி வைத்தார் முதல்வர் விஜய்.
சென்னை, கோவை உள்ளிட்ட 6 கோட்டங்களுக்காக 164 டீசல் பேருந்துகள், 136 சிஎன்ஜி பேருந்துகள் உள்பட 300 புதிய பேருந்துகள் தமிழக அரசால் வாங்கப்பட்டிருந்தன.
இந்தப் பேருந்துகளின் தொடக்க விழா இன்று சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. பேருந்துகளின் சேவையை முதல்வர் விஜய் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
தொடர்ந்து, திருவல்லிக்கேணி - பெரம்பூர் வழித்தடத்தில் செல்லும் 29 ஏ புதிய மாநகரப் பேருந்தில் முதல்வர் விஜய் பயணித்தார்.
தலைமைச் செயலகத்தில் இருந்து கலங்கரை விளக்கம் வரை அந்தப் பேருந்தில் பயணித்த முதல்வர் விஜய், ஓட்டுநர் மற்றும் நடத்துனருக்கு வாழ்த்து தெரிவித்தார்.பேருந்துக்குள் அவர் புகைப்படம், வீடியோ எடுத்துக் கொண்டார். அந்தக் காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.
முதல்வருடன் போக்குவரத்து துறை அமைச்சர் தமிழன் பார்த்திபன் மற்றும் உயர் அதிகாரிகள் இருந்தனர்.
முதல்வரால் இன்றையதினம் தொடங்கி வைக்கப்பட்ட புதிய பேருந்துகள் கிளாம்பாக்கம் மற்றும் கோயம்பேடு பேருந்து முனையங்கள் இருந்தும், மாநகர் போக்குவரத்து பேருந்துகள் தொடர்புடைய பேருந்து நிலையங்களிலிருந்தும் போக்கு வரத்து சேவையை உடனடியாக தொடங்
கின.