News Logo
முகப்பு தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா தொழில்நுட்பம் வேளாண்மை கல்வி சுற்றுலா ஆன்மிகம் விளையாட்டு உணவு ஜோதிடம் நலம்
அண்மைச் செய்தி
முக்கிய பிரிவுகள்
முகப்பு அண்மைச் செய்திகள் பிரீமியம் கட்டுரைகள்
தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா தொழில்நுட்பம் வேளாண்மை கல்வி சுற்றுலா ஆன்மிகம் விளையாட்டு உணவு ஜோதிடம் நலம்
Advertisement / விளம்பரம்

உங்கள் வணிகத்தை லட்சக்கணக்கான வாசகர்களிடம் கொண்டு சேர்க்க வேண்டுமா?

இணையதளத்தின் முதன்மைப் பக்கங்களில் மிகக் குறைந்த கட்டணத்தில் விளம்பரம் செய்ய உடனே எங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்.

வேளாண்மை

தமிழ்நாடு வேளாண் பட்ஜெட் அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு வரவேற்பும் எதிர்ப்பும்!

தமிழ்நாடு வேளாண் பட்ஜெட் அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு வரவேற்பும் எதிர்ப்பும்!
0 கருத்துக்கள்

தமிழ்நாடு வேளாண் பட்ஜெட் 2026-27: அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு வரவேற்பும் எதிர்ப்பும்!

​தமிழ்நாடு அரசு தாக்கல் செய்துள்ள 2026-27 ஆம் ஆண்டிற்கான வேளாண் பட்ஜெட் குறித்து, தமிழ்நாடு அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு மாநில கௌரவ தலைவர் MP. இராமன் தங்களது வரவேற்பையும் வருத்தத்தையும் செய்தியாக தெரிவித்துள்ளார்.

​வரவேற்கத்தக்க அம்சங்கள்:

​நீர்ப்பாசனத் திட்டங்கள்: நீர்ப்பாசன திட்டத்தை மேம்படுத்த ₹9,264 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்துள்ளது. (கடந்த காலத்தில் நீர்ப்பாசன திட்டங்களுக்கு போதுமான நிதி ஒதுக்கப்படவில்லை).

​நதிகள் இணைப்பு: காவேரி - குண்டாறு இணைப்புத் திட்டத்திற்கு ₹150 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது மிகவும் வரவேற்கத்தக்கது.

​சுற்றுலாத் தலங்கள் மேம்பாடு: வைகை, காவேரி மற்றும் தாமிரபரணி அணைக்கட்டு பகுதிகளை சுற்றுலாத் தலங்களாக மேம்படுத்த ₹25 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

​விவசாயிகள் பாதுகாப்பு: விவசாயிகள் வேளாண் பணியின் போது மனிதர்கள் மற்றும் விலங்குகளின் தாக்குதலில் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள ₹20 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

​எல் நீனோ பாதிப்பு நிவாரணம்: எல் நீனோ தாக்குதலால் இந்த ஆண்டு குருவை சாகுபடி செய்ய முடியாத நிலையைச் சமாளிக்க, கடனை எதிர்கொள்ள ₹640 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

​துரித நிவாரண நிதி: பேரிடர் காலத்தின் ஆபத்தை மேம்படுத்துவதற்கு / எதிர்கொள்வதற்கு ₹11,562 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

​ஒப்பற்ற திட்டங்கள்: வேளாண் வளர்ச்சிக்கு வரலாற்று சிறப்புமிக்க பல்வேறு திட்டங்களை அறிவித்துள்ள இந்த அரசைப் பாராட்டுகிறோம் மற்றும் வரவேற்கிறோம்.

​எதிர்ப்பும் வருத்தமும் (வேளாண் பயிர்க்கடன் தள்ளுபடி):

​விவசாயிகள் கடன் சுமையினால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள இந்தச் சூழ்நிலையில், பயிர்க் கடன் முழுமையையும் தள்ளுபடி செய்யாதது மிகவும் வருத்தத்தை அளிக்கிறது என தெரிவித்துள்ளார்.

News Today Tamil Editor
எழுத்தாளர் / Author

Kathiravan

newstodaytamill@gmail.com

உண்மையான மற்றும் உடனுக்குடனான செய்திகளை வாசகர்களுக்குத் துல்லியமாக வழங்குவதில் அனுபவம் மிக்க செய்தி ஆசிரியர்.

Published: 06 Aug 2026, 12:00 AM Updated: 06 Aug 2026, 12:00 AM

இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருந்ததா?

உங்கள் விருப்பத்தைத் தந்து எங்களை ஊக்குவியுங்கள்!

உங்களுக்குப் பிடிக்கலாம் (Recommended News)

தொடர்புடைய செய்திகள் எதுவும் இல்லை.

கருத்துப்பெட்டி (Comments)

உங்கள் பின்னூட்டத்தை உள்ளிடவும் (Enter Your Comment)

இந்த செய்திக்கு இன்னும் கருத்து வரவில்லை. முதல் ஆளாக நீங்களே பதிவிடுங்கள்!

Advertisement / விளம்பரம்

உங்கள் வணிகத்தை லட்சக்கணக்கான வாசகர்களிடம் கொண்டு சேர்க்க வேண்டுமா?

இணையதளத்தின் முதன்மைப் பக்கங்களில் மிகக் குறைந்த கட்டணத்தில் விளம்பரம் செய்ய உடனே எங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்.