அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் ஆதரவாளராக உள்ள பிரதமர் மோடியால் இந்திய ஜனநாயகம் மற்றும் பாஜகவிற்கு ஆபத்து ஏற்படும் என்று சுப்ரமணியன் சுவாமி பகீர் கிளப்பியுள்ளார்.
அமெரிக்கா அதிபராக டொனால்ட் டிரம்ப் பொறுப்பேற்றதில் இருந்து பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். சீனா, இந்தியா உள்பட பல்வேறு நாடுகள் மீது வரிகளை விதித்து வருகிறார். ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்தாவிட்டால், இந்திய இறக்குமதிகள் மீதான வரிகளை மேலும் அதிகரிப்போம் என்றும் டிரம்ப் நேற்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அப்போது அவர் பேசுகையில், " இந்திய பிரதமர் மோடி மிகவும் நல்லவர். என்னை மகிழ்ச்சியாக வைத்திருக்கவே அவர் விரும்புகிறார். ஆனால், நான் மகிழ்ச்சியாக இல்லை என்பது மோடிக்குத் தெரியும், இந்தியா என்னை மகிழ்ச்சியடைய செய்வது முக்கியம்" என்று தெரிவித்தார்.
இந்த நிலையில், பாஜக மூத்த தலைவரான சுப்ரமணியன் சுவாமி வெளியிட்டுள்ள ட்விட் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக அவரது எக்ஸ் தளத்தில், "மோடியை ஓய்வு பெறச்செய்து, மார்க் தர்ஷன் மண்டலில் வசிக்கச் சொல்ல வேண்டுமா என்பதை ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜகவின் பொதுக்குழு முடிவு செய்ய வேண்டும். டிரம்ப்பின் ஆதரவாளராக உள்ள மோடியால் இந்திய ஜனநாயகம் மற்றும் பாஜகவிற்கு ஆபத்து ஏற்படும்" என்று தெரிவித்துள்ளார்.