News Logo
முகப்பு தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா தொழில்நுட்பம் வேளாண்மை கல்வி சுற்றுலா ஆன்மிகம் விளையாட்டு உணவு ஜோதிடம் நலம்
அண்மைச் செய்தி
முக்கிய பிரிவுகள்
முகப்பு அண்மைச் செய்திகள் பிரீமியம் கட்டுரைகள்
தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா தொழில்நுட்பம் வேளாண்மை கல்வி சுற்றுலா ஆன்மிகம் விளையாட்டு உணவு ஜோதிடம் நலம்
Advertisement / விளம்பரம்

உங்கள் வணிகத்தை லட்சக்கணக்கான வாசகர்களிடம் கொண்டு சேர்க்க வேண்டுமா?

இணையதளத்தின் முதன்மைப் பக்கங்களில் மிகக் குறைந்த கட்டணத்தில் விளம்பரம் செய்ய உடனே எங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்.

தமிழ்நாடு

சென்னையில் மாநகராட்சி சார்பில் 55 பள்ளிகளில் குளிர் கூரை அமைக்க நடவடிக்கை:

சென்னையில் மாநகராட்சி சார்பில் 55 பள்ளிகளில் குளிர் கூரை அமைக்க நடவடிக்கை:
NEWS TODAY TAMIL
Updated on: 20 Jun 2026, 12:00 am 2 min read
0 கருத்துக்கள்

சென்னை: மாநகராட்சி சார்பில் சென்னையில் 55 குளிர் கூரைகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பு: சென்னையில் மேற்கொள்ளப்பட்ட முன்னோடி செயல்பாடுகளின் அனுபவத்தின் அடிப்படையில், பள்ளிகளில் குளிர் கூரை பூச்சு வேலைகள், வகுப்பறை கள் மற்றும் கூரைகளின் வெப்பநிலையை கணிசமாக குறைத்துள்ளன.

இந்த திட்டம் தற்போது தமிழ்நாடு காலநிலை மாற்றப் பணியின் ஒரு பகுதியாக விரிவு செய்யப்படுகிறது. மாநகராட்சியின் 49 பள்ளிகள், 6 அரசு பள்ளிகள் என மொத்தம் 55 பள்ளிகளில் இத்திட்டம் செயல் படுத்தப்பட உள்ளது. இதில் 5 அரசுப் பள்ளிகளில் குளிர் கூரை அமைக்கும் பணி மேற்கொள்ளப் பட்டுள்ளது.

பள்ளிகளில் அதிக ஒளி பிரதிபலிக்கும் கூரையை குளிர் கூரையாக உருவாக்குவதன் மூலம் வெப்ப அழுத்தத்தை குறைத்து, மின்சார தேவையை குறைப்பதற்கும், அரசு பள்ளி கட்டமைப்பில் காலநிலைச் செயல்பாடுகளை மையப்படுத்துவதற்கும் உதவியாக உள்ளது.

இதுதொடர்பாக மாநகராட்சிப் பள்ளி தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர் களுக்கான பயிற்சிக் கூட்டம் ரிப்பன் மாளிகையில் ஆணையர் சமீரன் தலைமையில் நேற்று நடைபெற்றது.

இணை ஆணையர் (கல்வி) க.கற்பகம், தமிழ்நாடு பசுமை காலநிலை நிறுவன மேலாண்மை இயக்குநர் ஆஷா அஜித், முதன்மை செயல் அலுவலர் பகன் ஜக்தீஷ் சுதாகர், தமிழ்நாடு காலநிலை மாற்ற இயக்கத்தின் உதவி திட்ட இயக்குநர் துஷ்கர் ஹரி ஷிண்டே உள்ளிட்டோர் இதில் பங்கேற்றன

ர்.


இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருந்ததா?

உங்கள் விருப்பத்தைத் தந்து எங்களை ஊக்குவியுங்கள்!

கருத்துப்பெட்டி (Comments)

உங்கள் பின்னூட்டத்தை உள்ளிடவும் (Enter Your Comment)

இந்த செய்திக்கு இன்னும் கருத்து வரவில்லை. முதல் ஆளாக நீங்களே பதிவிடுங்கள்!

Advertisement / விளம்பரம்

உங்கள் வணிகத்தை லட்சக்கணக்கான வாசகர்களிடம் கொண்டு சேர்க்க வேண்டுமா?

இணையதளத்தின் முதன்மைப் பக்கங்களில் மிகக் குறைந்த கட்டணத்தில் விளம்பரம் செய்ய உடனே எங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்.