News Logo
முகப்பு தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா தொழில்நுட்பம் வேளாண்மை கல்வி சுற்றுலா ஆன்மிகம்
அண்மைச் செய்தி
முக்கிய பிரிவுகள்
முகப்பு அண்மைச் செய்திகள்
தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா தொழில்நுட்பம் வேளாண்மை கல்வி சுற்றுலா ஆன்மிகம்
தமிழ்நாடு

தமிழ்நாடு முழுவதும் இன்று டாஸ்மாக் கடையை அடைத்து ஊழியர்கள் போராட்டம்!

தமிழ்நாடு முழுவதும் இன்று டாஸ்மாக் கடையை அடைத்து ஊழியர்கள் போராட்டம்!
0 கருத்துக்கள்

தமிழ்நாடு முழுவதும் இன்று தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் கடைகளை மூடி ஊழியர்கள் போராட்டம் நடத்த உள்ளனர்.

தமிழ்நாடு முழுவதும் அரசு சார்பில் நடத்தப்படும் டாஸ்மாக் கடைகளில் வேலை செய்யும் தற்காலிக பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், ஓய்வூதிய சலுகைகள் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் ஊழியர்கள் கடந்த பத்து நாட்களாக சென்னை எழும்பூரில் உள்ள டாஸ்முக் தலைமை அலுவலகம் முன்பு போராட்டம் நடத்தினர். இதையொட்டி தொழிற்சங்க நிர்வாகிகளுடன் அரசு தரப்பில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. ஆனால், அந்த பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது. 

இந்த நிலையில், தங்களது கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்ற வலியுறுத்தி தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகளை இன்று (பிப்ரவரி 9) மூடி போராட்டம் நடத்த டாஸ்மாக் ஊழியர்கள் முடிவு செய்துள்ளனர். இதன்படி இன்று  பகல் 12 மணி முதல் மாலை 3 மணி வரை மதுபான கடைகளை மூடி இப்போராட்டம் நடத்தப்படுகிறது.  

Kathiravan
Published By

Kathiravan

Editor / Reporter

தமிழ் செய்திகள் மற்றும் நடப்பு நிகழ்வுகள் தொடர்பான செய்திகளை வாசகர்களுக்கு துல்லியமாகவும் தெளிவாகவும் வழங்கும் செய்தியாளர்.

Published:

இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருந்ததா?

உங்கள் விருப்பத்தைத் தந்து எங்களை ஊக்குவியுங்கள்!

கருத்துப்பெட்டி (Comments)

உங்கள் பின்னூட்டத்தை உள்ளிடவும் (Enter Your Comment)

இந்த செய்திக்கு இன்னும் கருத்து வரவில்லை. முதல் ஆளாக நீங்களே பதிவிடுங்கள்!