விஜய் மீது எனக்கு பொறாமை இல்லை- நடிகர் ரஜினிகாந்த்.
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த நடிகர் ரஜினிகாந்த் கூறியதாவது,
விஜய் முதலமைச்சர் ஆகக் கூடாது என தடுக்க ரஜினி முயன்றார். இரு பெரிய கட்சிகள் கூட்டணிக்கு பேசினார் என்றெல்லாம் விமர்சிக்கிறார்கள்.
திமுக தலைவர் ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் தோற்றது எனக்கு சங்கடத்தை கொடுத்தது; அதற்காக நண்பன் என்கிற முறையில் அவரை சந்தித்தேன்.
அதற்குள் விஜய் முதல்வராவதை தடுக்க ரஜினிகாந்த், ஸ்டாலினை சந்தித்ததாக செய்தி வருகிறது; 'இரண்டு கட்சிகளை சேர்ப்பதற்காக பேசிக்கிறாங்க' என்றெல்லாம் சொல்கிறார்கள்; அப்படி பேச ரஜினிகாந்த் ஒரு தரம்கெட்ட ஆள் இல்லை; அதனை தெளிவுபடுத்துகிறேன்.
மு.க.ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் தோற்றது எனக்கு வருத்தமாக இருந்தது. அரசியலுக்கு அப்பாற்பட்டு அவருக்கும் எனக்கு 38-40 ஆண்டுகால நட்பு உள்ளது.
தவெக தொண்டர்கள், விஜய் ரசிகர்கள் ஜாக்கிரதையா நடந்துக்கணும். அவர்கள் என்ன தப்பு பண்ணாலும், அது நேரடியா விஜய்க்குதான் பாதிப்பு என உணரணும்.
நான் அரசியலுக்கு வரவில்லை என ரசிகர்களுக்கு நிச்சயம் ஆதங்கம் இருக்கும்; புரிகிறது; நான் அரசியலுக்கு வந்திருந்தால் 100% வெற்றி பெற்றிருப்பேன்.
விஜய் மீது எனக்கு பொறாமை என்ற விமர்சனம் வருகிறது; அரசியலிலேயே நான் இல்லாதபோது அவர்மேல் எனக்கு என்ன பொறாமை வரப்போகிறது; கமல்ஹாசன் முதலமைச்சர் ஆகியிருந்தால்கூட எனக்கு பொறாமை வந்திருக்குமோ.. என்னவோ? அப்போதுகூட வந்திருக்காது.
எனக்கும் விஜய்க்கும் தலைமுறை இடைவெளி இருக்கிறது. விஜயை சிறு வயதில் இருந்தே பார்த்துக்கொண்டிருக்கிறேன்; அவரைப் பார்த்து எனக்கு என்ன பொறாமை? என்டிஆர், எம்ஜிஆர் சாதனைகளைகூட விஜய் முந்திவிட்டார்.
Hமத்தியில் பாஜக, மாநிலத்தில் இரண்டு பெரிய கட்சிகளை எதிர்த்து தனி ஆளாக வெற்றி பெற்றிருக்கிறார். அதுவும் சினிமாத்துறையில் இருந்து வந்து.. அதில் எனக்கு பொறாமை இல்லை. ஆச்சர்யம் கலந்த சந்தோஷம்; சூப்பர்...
மக்கள் மத்தியில் விஜய் மீது பெரிய எதிர்பார்ப்பு இருக்கிறது. விஜய் மக்களுக்கு நல்லது செய்யணும். செய்வார் என்ற நம்பிக்கை இருக்கிறது. வாழ்த்துகள் என்றார்.