ரயில் டிக்கெட் கட்டணம் இன்று முதல் உயர்வு.
நாடு முழுவதும் ரயில் டிக்கெட் கட்டண உயர்வு இன்று முதல் அமலுக்கு வருகிறது.
சாதாரண வகுப்பில் 215 கி.மீ.க்கும் குறைவான தூரம் பயணித்தால் எந்தவித கட்டண உயர்வும் இல்லை.
215 கி.மீ.க்கும் மேற்பட்ட பயணங்களுக்கு சாதாரண வகுப்பில் ஒரு கி.மீ.க்கு ஒரு பைசா என கட்டணம் உயர்வு.
மெயில், விரைவு ரயில்களில் 215 கி.மீ.க்கும் மேற்பட்ட பயணங்களுக்கு ஒரு கி.மீ.க்கு 2 பைசா கட்டணம் உயர்வு.
அனைத்து விதமான ரயில்களிலும் ஏசி பெட்டிகளில் பயணிக்க கி.மீ.க்கு 2 பைசா கட்டணம் உயர்வு.
6,500 கிலோ மீட்டர் வரையிலான ரயில்களில் ரூ.10 மட்டுமே கட்டணம் உயர்வு.
கட்டண உயர்வு இல்லை?
215 கி.மீ வரை பயணிப்போருக்கும், புறநகர் மின்சார ரயில்களில் மற்றும் சீசன் டிக்கெட் எடுப்போருக்கும் கட்டண உயர்வு இல்லை.