முதல்வர் விஜய்க்கு மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் பிரசாதம்
அமைச்சர் ரமேஷ் நேரில் வழங்கினார்
முதலமைச்சரிடம் மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் கும்பாபிஷேக பிரசாதம் வழங்கப்பட்டது.
இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர ரமேஷ் சமூக வலைதளப் பதிவின்படி:
உலகப் புகழ்பெற்ற மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலின் கும்பாபிஷேகம் 17 ஆண்டுகளுக்குப் பிறகு, கடந்த செப்டம்பர் 17-ஆம் தேதி வெகு விமர்சையாகவும், அனைத்துத் தரப்பினரும் பாராட்டும் வகையிலும் சிறப்பாக நடைபெற்றது.
இந்நிலையில், மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் கும்பாபிஷேகத்தின் புனித பிரசாதம் இன்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் அவர்களிடம் நேரில் வழங்கப்பட்டது.
பிரசாதத்தைப் பெற்றுக் கொண்ட முதலமைச்சர், கும்பாபிஷேக விழா மிகவும் சிறப்பாக நடைபெற்று முடிந்ததற்குத் தனது வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொண்டார் என்று பதிவிட்டுள்ளார்.